Election 2019: நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் போன்ற பல பரிணாமங்களைக் கொண்டவர் பிரபு தேவா.
தற்போது ’தேவி 2, யங் மங் சங், பொன்.மாணிக்கவேல், தேள்’ ஆகிய தமிழ் படங்களிலும், ’மரக்கார்’ என்ற மலையாளப் படத்திலும், ’ஸ்ட்ரீட் டான்ஸர்’ என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.
அதோடு ’டபாங் 3’ என்ற இந்திப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துள்ளார். உடனே எந்த அரசியல் கட்சிக்காக என யோசிக்காதீர்கள்.
An inspiring tune appealing to all to #GoOutAndVote #YourVoteMatters in #IndiaElections2019@TNelectionsCEO pic.twitter.com/tB0QJiiTdU https://t.co/hHG8WecANT
— Prabhudheva (@PDdancing) April 16, 2019
100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் ஓட்டுக்கு பணம் பெறுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ’என்னாத்துக்கு நோட்டு, எனக்கு ஒரு டவுட்டு’ என்ற பாடலை பிரபுதேவா பாடியுள்ளார்.