/tamil-ie/media/media_files/uploads/2018/05/sunny-leone.jpg)
Sunny Leone's Tweet: இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின.
இணையமே தேர்தல் முடிவுகளை டிரெண்ட் செய்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் மறுபுறம் நடிகை சன்னி லியோன் டிரெண்ட் ஆகிக் கொண்டிருந்தார்.
அதற்கான காரணம் என்னவென்று மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.
முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தேர்தல் நேரலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பா.ஜ.க வேட்பாளர் சன்னி தியோலின் வாக்கு முன்னிலையைப் பற்றி பேசிக் கொண்டிருந்த தொகுப்பாளர், சன்னி லியோன் லீடிங்கில் உள்ளார் என கூறிவிட, அடுத்த நிமிடமே ‘எத்தனை வாக்குகள் முன்னிலையில்?’ என ட்வீட் போட்டார் சன்னி.
Leading by How many votes ???? ;) ????
— Sunny Leone (@SunnyLeone) May 23, 2019
அவ்வளவு தான் மொத்த நெட்டிசன்களும் சன்னி லியோனை டிரெண்ட் செய்து தெறிக்க விட்டு விட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.