New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/13_adobespark.png)
zeetamil serial news: பெங்களூருவை சேர்ந்த நக்ஷத்திரா ஸ்ரீனிவாஸ் பல கன்னடம், தெலுங்கு, தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றென்றும் புன்னகை. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரின் நாயகி தென்றல். இவரது நிஜப்பெயர் நக்ஷத்திரா ஸ்ரீனிவாசஸ். பெங்களூருவை சேர்ந்தவர். பல கன்னடம், தெலுங்கு, தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் கன்னட சினிமாவில் தான் அறிமுகமானார். கன்னட சீரியலான கிருஷ்ணா ருக்மணி தொடரில் நடித்தார்.
இதை தொடர்ந்து தெலுங்கு சீரியலான புன்னகா, கொரந்தா தீபம் போன்ற தொடர்களில் நடித்தார். அதன்பிறகு ஜீ தமிழின் சிவகாமி ஐபிஎஸ் தொடரில் நடித்தார். தொடர்ந்து என்றென்றும் புன்னகை சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். முதலில் நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆரம்பித்தவர் தற்போது நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது மார்டன் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.