Advertisment
Presenting Partner
Desktop GIF

முடிவுக்கு வந்த ஜீ தமிழின் முக்கிய சீரியல் : உறுதிப்படுத்திய இறுதி புகைப்படம்

Zee Tamil’s endrendrum punnagai serial climax shooting photos goes viral in social media Tamil News: 'என்றென்றும் புன்னகை' சீரியல் முடிவுக்கு வரப்போவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Endrendrum Punnagai serial at its climax

Endrendrum Punnagai (என்றென்றும் புன்னகை) tamil serial news

Endrendrum Punnagai serial Tamil News: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முன்னணி சீரியலில் ஒன்று 'என்றென்றும் புன்னகை' சீரியல். திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், 'என்றென்றும் புன்னகை' சீரியல் முடிவுக்கு வரப்போவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தில் சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோடில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் இடம்பிடித்துள்ளனர்.

publive-image

'என்றென்றும் புன்னகை' சீரியல் ஜீ தெலுங்கு டிவியில் ஒளிபரப்பான 'மங்கம்மா காரி முனவாரலு' என்ற சீரியலின் கதையை தழுவி எடுக்கப்பட்ட சீரியல் ஆகும். இதில் ஹீரோவாக நடிகர் தீபக் குமார் நடித்து வந்தார். அவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதில் விஷ்ணு காந்த் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நடிகர் தீபக் குமார் ஒரு டிக்-டாக் பிரபலமாவார். இந்த தளத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய அவர் திருமணம் சீரியலில் சின்னத்திரையில் அறிமுகமானார். 'என்றென்றும் புன்னகை' சீரியலில் அவருக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இந்த சீரியலில் இருந்து அவர் திடீரென விலகியதால் தான் சீரியலுக்கு வரவேற்பு குறைந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதனிடையே திருமணம் செய்துகொண்ட தீபக் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு விஷ்ணுகாந்த் பழகிய முகம் என்றாலும், அவர் ஹீரோவாக அறிமுகமாவது இதுவே முதல் முறையாகும். அவர் நடிக்க தொடங்கிய சில மாதங்களிலே 'என்றென்றும் புன்னகை' சீரியல் நிறுத்தப்படுவது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது. தற்போது கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து வரும் 'என்றென்றும் புன்னகை' சீரியலில், இறுதியாக ஒளிபரப்பட உள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Entertainment News Tamil Zee Tamil Zee Tv Zeetamil Serial Tamil Serial News Tamil Serial Update Endrendrum Punnagai Serial Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment