இந்திய சினிமா என்றால் எல்லோரும் பாலிவுட் சினிமா என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்ற தங்கலான் படத்தில் நடித்துள்ள ஆங்கில நடிகரான டேனியல் கால்டாகிரேன் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் தங்கலான். படத்தில் விக்ரம் தவிர, பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரேன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 118 நாட்களில் நிறைவடைந்த நிலையில்,தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சுதந்திர தனத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாக உள்ளது. நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லும் சியான் விக்ரம் இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், படக்குழுவினர் ப்ராமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள ஹாலிட்வுடு் நடிகர் டேனியல் கால்டாகிரேன், சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்திய சினிமா என்றால் அனைவரும் பாலிவுட் சினிமா மட்டும் தான் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. அமெரிக்கா பிரிட்டீஷ் உள்ளிட்ட நாடுகளில் இந்திய சினிமா பற்றி இன்னும் அறியாமல் இருக்கிறார்கள். இந்திய சினிமா என்றால் பாலிவுட் மட்டுமல்ல, எனக்கு தமிழ்நாடு ரொம்ப பிடிச்சிருக்கு என்று என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“