Advertisment

Enai Nokki Payum Thotta Review : எனை நோக்கி பாயும் தோட்டா - புத்துணர்வான ரொமாண்டிக் படம்!

Enai Noki Paayum Thota Movie Review, Release Live Updates: எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் லைவ் அப்டேட்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Enai Noki Paayum Thota Review, Enai Noki Paayum Thota Movie Release

Enai Noki Paayum Thota Review, Enai Noki Paayum Thota Movie Release

 ENPT Movie Review, Release Updates: நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் மேகா ஆகாஷ், சசிக்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 2016-ல் தொடங்கப்பட்ட இப்படம் ‘இந்தா ரிலீஸாகும், அந்தா ரிலீஸாகும்’ என வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில் டயர்டாகி, அதனை மறந்தே விட்டனர்.

Advertisment

Enai Noki Paayum Thota Movie Review: ENPT Movie Release Live Coverage, Live Reactions

கடந்த வருடம் இதன் கடைசி ஷெட்யூலும் முடிந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் எனக் சொல்லப்பட்டு, பின்னர் தள்ளிப் போனது. கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்னையே இதற்கு முக்கியக் காரணம் என்றார்கள் நெருங்கிய வட்டாரத்தினர். இதற்கிடையே இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் இத்திரைப்படம், இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது.

Live Blog

ENPT Review Release Updates

எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் லைவ் அப்டேட்!



























Highlights

    16:09 (IST)29 Nov 2019

    எனை நோக்கி பாயும் தோட்டா = அச்சம் என்பது மடமையடா

    எனை நோக்கி பாயும் தோட்டா, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைப் போன்றே முதல் பாதி அழகான லவ் ஸ்டோரியாகவும், இரண்டாம் பாதி த்ரில்லராக இருப்பதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். 

    15:22 (IST)29 Nov 2019

    மாருபட்ட தனுஷ்

    அசுரனில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, ஸ்டைலிஷான ரகுவாக மாறியிருக்கிறார் தனுஷ் 

    14:54 (IST)29 Nov 2019

    தனுஷ் எல்லா கதைக்கும் பொருந்துறாரு....

    எந்த விதமான கதைக்கும் பொருந்தக் கூடியவர் என்பதை மீண்டும் தனுஷ் நிரூபித்திருக்கிறார் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. 

    14:36 (IST)29 Nov 2019

    புத்துணர்வான படம்

    எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் மனதிற்கு புத்துணர்வு தரும் வகையில் இருப்பதாக இவர் குறிப்பிட்டுள்ளார். 

    14:13 (IST)29 Nov 2019

    2-ம் பாகம் எப்போ வரும்?

    இவ்வளவு நாள் காத்திருந்து பார்த்தாலும் படம் வெறித்தனம் என்றும் 2-ம் பாகத்திற்காக காத்திருக்கிறேன் என்றும் இந்த பயனர் தெரிவித்துள்ளார். 

    14:13 (IST)29 Nov 2019

    2-ம் பாகம் எப்போ வரும்?

    இவ்வளவு நாள் காத்திருந்து பார்த்தாலும் படம் வெறித்தனம் என்றும் 2-ம் பாகத்திற்காக காத்திருக்கிறேன் என்றும் இந்த பயனர் தெரிவித்துள்ளார். 

    13:34 (IST)29 Nov 2019

    இது காதலர்களுக்கான படம்

    எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் காதலர்களுக்கான திரைப்படம் என்று நடிகர் ஜார்ஜ் விஜய் தெரிவித்துள்ளார். 

    12:54 (IST)29 Nov 2019

    விக்ரம் பிரபு வாழ்த்து

    நடிகர் விகரம் பிரபு, இயக்குநர் கெளதம் மேனனுக்கும், நடிகர் தனுஷுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    12:19 (IST)29 Nov 2019

    வாய்ஸ் ஓவர் கொஞ்சம் ஓவர் டோஸா இருக்கு

    ”ரெகுலர் கெளதம் மேனன் படம், அந்த வாய்ஸ் ஓவர் கொஞ்சம் ஓவர் டோஸாவே இருக்கு, மறுவார்த்தை பாட்டும் விசிறி பாட்டும் கேக்க நல்லாருக்கு, ஆனா விஷுவல்ஸ் நல்லா இல்ல. ஆவரேஜ் படம்” என்பது இந்தப் பயனரின் கருத்து

    12:03 (IST)29 Nov 2019

    கெளதம் மேனன் ஃபேன்ஸுக்கு ட்ரீட்

    எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் முதல் பாதி கவிதைத்துவமாகவும், இரண்டாம் பாதி ட்விஸ்ட் நிறைந்ததாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

    11:24 (IST)29 Nov 2019

    ரொமாண்டிக் - த்ரில்லர்

    எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் முதல் பாதி ரொமாண்டிக்காகவும், இரண்டாம் பாதி த்ரில்லராகவும், முழுக்க முழுக்க கெளதம் மேனன் ஸ்டைலில் இருப்பதாகவும் இந்த பயனர் தெரிவித்துள்ளார்.  

    11:07 (IST)29 Nov 2019

    ஐசரி கணேஷை பாராட்டும் தனுஷ் - கெளதம் மேனன் ஃபேன்ஸ்

    எனை நோக்கி பாயும் தோட்டா படம் ஃபைனான்ஸியல் பிரச்னைகளில் சிக்கியிருந்த போது, அதனைத் தீர்த்து, படம் ரிலீஸ் ஆவதற்கு உதவி புரிந்த வேல்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸின் ஐசரி கணேஷுக்கு தனுஷ் மற்றும் கெளதம் மேனன் ஃபேன்ஸ் தங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். 

    10:49 (IST)29 Nov 2019

    கெளதம் மேனன் உருக்கம்

    தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லாவிட்டால், இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்காது என்றும், பெரிய இதயமும், தைரியமும் கொண்ட மனிதரை இன்று நான் பார்த்தேன் எனவும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 

    10:44 (IST)29 Nov 2019

    அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து

    ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்டின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர், அர்ச்சனா கல்பாத்தி நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் கெளதம் மேனனுக்கும், தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

    10:14 (IST)29 Nov 2019

    தனுஷ் - மேகா ஆகாஷ் கெமிஸ்ட்ரி

    தனுஷ் - மேகா ஆகாஷின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருப்பதாக குறிப்பிட்டு வருகிறார்கள் ரசிகர்கள் 

    09:55 (IST)29 Nov 2019

    புதிய தனுஷ்!

    எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் புதிய தனுஷை பார்ப்பதற்காக, ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என இந்த பயனர் தெரிவித்திருக்கிறார். 

    09:42 (IST)29 Nov 2019

    தனுஷ் ரசிகர்களே ரெடியா?

    கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படத்தைப் பார்க்க, ரசிகர்கள் மிகுந்த ஆவலாக இருந்தனர். அதற்கேற்றார் போல், அந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. ஆனால் சில ஃபைனான்ஸியல் பிரச்னைகளால் படம் தள்ளிக் கொண்டே போனது. இந்நிலையில் இன்று தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்ட திரைப்படம் வெளியாகியிருக்கிறது. 

    Enai Nokki Paayum Thotta: ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்தது. இதன் வெளியீடு தாமதமானதற்குக் காரணம் நிதி பிரச்சினைகள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 6-ஆம் தேதி உலகளவில் திரைக்கு வரும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அப்போதும் திரைக்கு வரவில்லை. அந்த ஃபைனான்ஸியல் பிரச்னைகளை தீர்க்க, கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக முன்பு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    Dhanush Gautham Menon
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment