மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் விடுமுறையில் திரையில் வெளிவரவுள்ளது. இதற்காக ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால் திரையரங்கில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதமா அல்லது 50 சதவிகிதமா என்பதில் இன்னும் குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை.
இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கதையை 2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ல் கே.ரங்கதாஸ் என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்த கதையை யாரோ திருடி படமாக்கி விட்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்த்னு, அர்ஜுன் தாஸ், மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.. அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்