Entertainment news in tamil: நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் நிஷா கணேஷ் சின்னத்திரையின் நட்சத்திர ஜோடிகளில் குறிப்பிடத்தக்கவர்கள். நடிகர் கணேஷ் வெங்கட்ராம், 'அபியும் நானும்', உன்னைப்போல் ஒருவன்', 'தனி ஒருவன்' போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர், மாடலாக இருந்தவர். சுமார் 200 மேற்பட்ட விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரைக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயாவி 3டி தொடர் முலம் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பல தென்னிந்தியா திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலமாகி இருந்த கணேஷ், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிழச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் பிசியாக நடித்து வருகிறார்.
சின்னத்திரையின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் கணேஷ் மற்றும் நடிகை நிஷா, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமைரா எனும் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில், கணேஷின் பிறந்த நாளை ரொமான்டிக்காக கொண்ட வேண்டும் என நினைத்த அவரது மனைவி நிஷா, ஒரு தனியார் ரிசார்ட்டில் கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். தற்போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார் நடிகர் கணேஷ்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )