Entertainment news in tamil: குக்கூ… குக்கூ…. முட்டைய போடும் கோழிக்கு… என ஆரம்பிக்கும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் சக்கைபோடு போட்டு சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் யூ-ட்யூப் தளத்தில் வெளியான இந்த பாடல், வெளியான ஒரு சில நாள்களில் பல மில்லியன்களை தாண்டிது. இது தற்போது வரை 76 மில்லியன் (7.6 கோடி) பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்படி இந்த பாடல் சூப்பர் ஹிட் அடிக்க முக்கிய காரணம், சமூக வலைத்தளங்கள் தான் என்று அடித்து கூறலாம்.

‘என்ஜாய் எஞ்சாமி’ வெளியான ஓரிரு நாட்களில் டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸ் போன்ற வலைதள பக்கங்களில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்து. இந்த பாடல் தங்களுக்கானது தான் என்றெண்ணிய டிக்டாக் பிரபலங்கள் கொண்டாடி தீர்த்ததோடு, தொடர்ந்து ட்ரெண்டிங் செய்தும் வருகின்றனர். இவர்களைத் தவிர, சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள நட்சத்திரங்கள், இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களை தங்கள் இணைய பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டும் வருகின்றனர்.
இந்த பாடல் சுயதீன கலைஞர்களை (independant musicians) ஊக்குவிக்கும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள ‘மாஜா’ தளத்தின் தயாரிப்பில் உருவாகியது. இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தெருக்கூத்து பாடகர் ‘அறிவு’ வரிகள் எழுதியும் பாடியும் உள்ளார். இவரோடு இணைந்து பின்னணி பாடகி தீ பாடலுக்கு மேலும் மெருகூட்டியுள்ளார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்ஜாய் செய்து வரும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை சமூக வலைதளங்களை தொடர்ந்து வலம் வந்த வண்ணம் உள்ளது. அதோடு இந்த பாடலை பாடிய பாடகர்களை கவுரவிக்கும் விதமாக, அமுல் நிறுவனம் தீ மற்றும் அறிவு இருவரையும் கார்ட்டூனாக சித்தரித்து வெளியிட்டது.
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள பல நட்சத்திரங்கள், இந்த பாடலுக்கு நடனமாடி பதிவிட்டுள்ள வீடியோக்களை இங்கு பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )