/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-02T105557.246.jpg)
Entertainment news Tamil: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ள இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரை அவரது ரசிகர்கள் ‘தல’ என்கிற புனைபெயருடன் அன்போடு அழைப்பதுண்டு.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-02T110428.460.jpg)
நடிகர் அஜித் ரசிகர்களை பொறுத்தவரை 'தல' என்றால் அது அஜித் மட்டும் தான். வேறு ஒரு பிரபலத்தை தல என்று அழைப்பது அவர்களுக்கு பிடிக்காது. அப்படி யாரவது சமூக வலைத்தளங்களிலோ அல்லது பொதுவெளியிலோ கூறக்கேள்விபட்டால் அவர்களை ட்ரோல் செய்தும், கேலி செய்தும் மீம் போட்டுதள்ளி விடுவார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியின் போது நடிகர் தனுஷ் தோனியை ‘தல’ என்று குறிப்பிட்டு ட்விட் போட, அவரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து பதிவிட்டார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-02T110514.387.jpg)
இப்படி அஜித் ரசிகர்கள் 'தல' என்கிற பட்டத்தை உரிமை கொண்டாடி வரும் நிலையில், தனக்கு ‘தல’ என்ற பட்டமே வேண்டாம் என்று நடிகர் அஜித் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது.
நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் "இனிவரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ அல்லது பேசும்போதோ எனது இயற்கை பெயரான அஜித்குமார், அஜித், ஏகே என குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டை பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
— Suresh Chandra (@SureshChandraa) December 1, 2021
இந்நிலையில், தனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ‘தல’ என்ற பட்டம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பேசிய வீடியோ ஒன்று சமூக மற்றும் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தோனி பேசியுள்ள அந்த வீடியோவில், "இந்த பட்டப்பெயர் எனக்கு ரொம்வபே ஸ்பெஷல். நான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் ஒருபோதும் எனது பெயரை கூறி அழைப்பதில்லை. அவர்கள் “தல” என்று தான் அழைக்கிறார்கள். அதைக் கேட்டுக்கும் எனக்கு அவர் நிச்சயம் சென்னை அணியின் ரசிகர் தான் என்பதும், தென்னிந்தியாவில் இருந்து வருபவர் என்றும் புரிந்துகொள்வேன்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-02T111343.041.jpg)
மேலும், ரசிகர்கள் என்னை தல என அழைப்பது ஸ்பெஷலான உணர்வைத் தருகிறது. அவர்கள் எனக்கு மட்டுமல்ல மொத்த டீமிற்கும் ஆதரவை தருகிறார்கள்." என்று கூறியுள்ளார்.
https://t.co/YwyXJHsmnTpic.twitter.com/zeeAIsqtLh
— A (@Aarsun) December 1, 2021
தற்போது அஜித் தனது ‘தல’ பட்டத்தை உதறியுள்ள நிலையில், இனி தோனி தான் ஒரே தல என்று கூறி வரும் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Source : Mr. AK 😂🔥#Beast#ThalaDhoni@actorvijaypic.twitter.com/pvQRi4ko6h
— ꪜ ɪ ᴊ ᴀ ʏ 🕴️கில்லி ❁ (@Ghilli_Vijay2) December 1, 2021
One & Only #ThalaDhoni 😍💥#Beast@actorvijay 💉❤️ pic.twitter.com/FO3AbCprsw
— தளபதி கார்த்திகேயன் (@karthik90792407) December 1, 2021
Rewind : #ThalaDhoni with #ThalapathyVIJAY#Beast@actorvijaypic.twitter.com/H6qiHCJ1cy
— Actor Vijay Universe (@ActorVijayUniv) December 1, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.