scorecardresearch

ஆஸ்கர் 2022: சிறந்த பிரிவில் இந்திய ஆவணப்படம்!.. ஹாலிவுட் படம் குறித்து ட்வீட் செய்த பிரபல பாடலாசிரியர்.. சினிமா செய்திகள் உள்ளே

இந்தப் பதிவை வெளியிட்ட சில மணி நேரங்கலில் 18 லட்சம் லைக்குகளை அவர் அள்ளினார். கமென்டுகளிலும் அவரது ரசிகர்கள் அன்பான வார்ததைகளை பார்க்க முடிகிறது.

ஆஸ்கர் 2022: சிறந்த பிரிவில் இந்திய ஆவணப்படம்!.. ஹாலிவுட் படம் குறித்து ட்வீட் செய்த பிரபல பாடலாசிரியர்.. சினிமா செய்திகள் உள்ளே

ஆஸ்கர் 2022: சிறந்த ஆவணப்பட பிரிவில் இந்திய ஆவணப்படம்!

ஆஸ்கர் 2022 சிறந்த ஆவணப்பட பிரிவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரைட்டிங் வித் ஃபயர் என்ற ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட முதல் படம் இதுவாகும்.

தலித் பெண் செய்தியாளர்களால் நடத்தப்பட்டுவரும் செய்தித்தாளான கபர் லஹாரியா குறித்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பப்ளிகேஷனின் தலைமை நிருபர், குற்றப்பிரிவு செய்தி சேகரிப்பு நிருபர் ஆகியோரைச் சுற்றி இந்தப் படம் நகர்கிறது. மிகவும் அபாயகரமான பகுதிகளில் அவர்கள் எப்படி துணிச்சலாக செய்திகளை சேகரிக்கின்றனர் என்பதையும் இந்தப் படம் காட்சிகளாக படம்பிடித்துள்ளது.

இந்த ஆவணப்படத்தை தயாரித்து, இயக்கி படத்தொகுப்பு செய்திருப்பவர் சுஷ்மித் கோஷ் மற்றும் ரிந்து தாமஸ் ஆவர். சுஷ்மித் கோஷ், கரன் தப்ளியால் உடன் இணைந்து இந்த ஆவணப்படத்துக்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.

ரைட்டிங் வித் ஃபயர் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளி வந்திருக்கிறது.

இந்தியாவை களமாகக் கொண்டு வெளிநாட்டு இயக்குநர்களால் எடுக்கப்பட்ட ஸ்மைல் பிங்கி, எண்ட் ஆஃப் சென்டன்ஸ் ஆகிய இரண்டு ஆவணப் படங்கள் இதற்கு முன்பு ஆஸ்கர் வென்றுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூரியா நடிப்பில் தயாரான ஜெய் பீம், மலையாள நடிகர் மோகன் லாலின் மரக்காயர் அரபிக்கடலின்டே சிங்கம் ஆகிய படங்கள் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது.

வைரலாகி வரும் சல்மான் கானின் போட்டோ!

பாலிவுட்டில் முன்னணி நடிகரான சல்மான் கான் தனது தாயாரின் மடியில் படுத்துக் கொண்டு இருந்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

தாயின் மடி… சொர்க்கமாக உள்ளது என்று அவர்  பதிவை வெளியிட்டியிருந்தார்.

இந்தப் பதிவை வெளியிட்ட சில மணி நேரங்கலில் 18 லட்சம் லைக்குகளை அவர் அள்ளினார்.

கமென்டுகளிலும் அவரது ரசிகர்கள் அன்பான வார்ததைகளை பார்க்க முடிகிறது.

கதையாசிரியர் சலிம் கான், அவரது முதல் மனைவி சல்மா கான் தம்பதியருக்கு 1965ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிறந்தார் சல்மான் கான்.

பீவி ஹோ தோ ஐசி என்ற படத்தின் மூலம் 1988ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.  அப்போது முதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் திரையுலகில் கோலோச்சி வருகிறார் சல்மான் கான்.

அன்திம்: தி ஃபைனல் ட்ரூத் என்ற படம் சமீபத்தில் வெளியானது.

அந்தப் படத்தில் அவர் காவலராக நடித்திருந்தார்.

ரியாலிட்டி ஷோவான பிக் பாஸின் 15-ஆவது சீசனையும் அவர் சமீபத்தில் முடித்துக் கொடுத்தார்.

நடிகை கத்ரீனா கைஃப் ஜோடியாக நடிக்கும் டைகர் 3 படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். ஷாருக் கான், இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

  கபி ஈத் கபி திவாலி என்ற படத்தையும் தன் வசம் வைத்துள்ளார் சல்மான் கான்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

இந்த நாவலின் திரைப்படத்தில்

கதாநாயகியாக அலியா பட்

முன்னணி பாலிவுட் நடிகை அலியா பட் கங்குபாய் கதியாவாடி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார்.

படத்தின் டிரைலர் சமீபத்தில் யூ-டியூப் தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் அலியா பட். முன்னணி நடிகர் அஜய் தேவ்கனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் ஹுசைன் ஜைதி எழுதிய மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

72-ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்தப் படம் பாராட்டுகளை பெற்றது.

இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் 25-ஆம் தேதி படம் வெளியாகிறது.

இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக வித்தியாசமான தோற்றத்தில் அவர் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களில் கிரீம் நிற புடவை அணிந்து சிவப்பு நிற ரோஜாவை தலையில் வைத்துள்ளார்.

பீரியட் படம் என்பதால் கொஞ்சம் அந்தக் கால லுக்கை கொண்டுவர இதுபோன்ற மேக்அப்பை அவர் செய்திருக்கிறார்.

படத்திலும் பல காட்சிகளில் புடவை அணிந்து ரோஜா பூவை வைத்துக் கொண்டிருக்கிறார் அலியா பட்.

ஆங்கிலப் படம் குறித்து ட்வீட் பதிவு வெளியிட்ட பிரபல கவிஞர்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான டோன்ட் லுக் அப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது.

படம் வெளியாகி இரண்டு வாரங்களில் 263 மில்லியன் மணி நேரங்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் குறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில்,

விண்கோள் ஒன்று மோதப்போவதால் பூமி சிதறப்போகிறதென்று பதறிச் சொல்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். அமெரிக்க ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார். உலகம் நகையாடுகிறது கடைசியில் அது நிகழ்ந்தே விடுகிறது என பதிவிட்டுள்ளார் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், பனை என்ற படம்  குறித்து ட்வீட் செய்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

அதில், ‘’மண் சார்ந்த மரமும் மரம் சார்ந்த மக்களுக்குமான படம் பனை. ஒரு பாட்டு: “ஒத்தப் பனமரமா ஒத்தையில நிக்கிறனே மாமியாள அடகுவச்சு மாம்பழமா நான் கேட்டேன் நாத்தனாரை அடகுவச்சு நவ்வாப்பழமா நான் கேட்டேன் பிஞ்சுக் கழுத்துக்கு மஞ்சத் தாலிதான் கேட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Entertainment stories bollywood kollywood alia bhat

Best of Express