Entertainment Tamil News: தமிழ்த் திரையுலகில் 90-களில் கொண்டாடப்பட்ட ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. பெங்காலி மொழியில் முதன்முதலாக நடிக்க தொடங்கிய இவர் பின் மலையாள படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடித்த இவர் அஜித், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.

நடிகை தேவயானி ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ என்ற படத்தில் நடிக்கும் போது, அந்த பட இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.



திருமணம் ஆகியதால் வெள்ளித்திரையில் இருந்து விலகிய நடிகை தேவயானி பின்னர், சின்னத் திரையிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். இவர் நடித்த சீரியல்கள் எல்லாம் இவரை மீண்டும் ஒருமுறை பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைய செய்தது. அதிலும் குறிப்பாக இவர் நடித்த கோலங்கள் சீரியல் பற்றி அப்போது பேசாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகையானார்.

சீரியல்களுக்கு சிறிய இடைவெளி கொடுத்த நடிகை தேவயானி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் குடும்ப பாரத்தை சுமக்கும் குடும்ப தலைவியாக நடிக்கிறார்.

சின்னத்திரை சீரியல்களில் புடவையில் எப்போதும் அழகாக தோன்றும் நடிகை தேவயானி, சமீபத்தில் பேன்ட்-சர்ட் என மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.இந்த மாடர்ன் லுக்கை பார்த்த ரசிகர்கள், ‘இது நம்ம தேவயானி தான? என மூக்குமேல் விறல் வைத்து ஆச்சரியமடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“