scorecardresearch

நடிகையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்… ரியல் லைஃபில் இணைகிறதா வர்மா ஜோடி?

Is Actor Dhruv Vikram dating actress banita sandhu? Tamil News: நடிகர் துருவ் விக்ரம் “ஆதித்ய வர்மா” படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பனிதா சாந்துவுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

Entertainment Tamil News: Dhruv Vikram dating Adithya Varma actress Banita?

Entertainment Tamil News: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தனது தனித்துவமான நடிப்பு ஆற்றலால் தனிக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்றால் நிச்சயம் மிகையாது. இவரது மகன் துருவ், அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கான “ஆதித்ய வர்மா” படம் மூலமாக நடிகராக அறிமுமாகினார். தற்போது துருவ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் “மகான்” படத்தில் அப்பா விக்ரம் உடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் உடன் நடிகை சிம்ரன் மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தற்போது, “மகான்” படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழுடன் ஒப்புதல் அளித்துள்ளனர். கொரோனா தொற்று அச்சத்தால் படம் திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, நடிகர் துருவ் விக்ரம் “ஆதித்ய வர்மா” படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பனிதா சாந்துவுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது. அவர்கள் இருவரும் 2022 புத்தாண்டை துபாயில் ஜோடியாக கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. துருவ் விக்ரம் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் துருவ் – பனிதா சாந்து இருவரும் டேட்டிங்குக்காக துபாய் சென்றுள்ளனர். அவர்கள் காதலிக்கிறார்களா? என்றும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Entertainment tamil news dhruv vikram dating adithya varma actress banita