New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/12/tamil-indian-express-2021-12-22T104335.550.jpg)
Sridevi's doppelganger Dipali Choudhary insta viral videos Tamil News: நடிகை ஸ்ரீ தேவியை போலவே அச்சு அசலாக இருக்கும் தீபாலி சவுத்ரி என்கிற பெண் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளார்.
Dipali Choudhary Tamil News: இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. தமிழகத்தின் விருதுநகரில் பிறந்த இவர், 80 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தார். இதனால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும், இவரது நடிப்பை பாராட்டும் விதமாக இவருக்கு பத்மஸ்ரீ, தேசிய விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துக்கொண்ட நடிகை ஸ்ரீ தேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று அவர் எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தினார்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீ தேவியை போலவே அச்சு அசலாக இருக்கும் தீபாலி சவுத்ரி என்கிற பெண் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளார். இவர் நடிகை ஸ்ரீதேவியை போன்றே அலங்காரம் செய்தும், முக பாவனைகள் செய்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மேலும், இவர் அச்சு அசல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை போலவே இருப்பதை கண்டு இணைய வாசிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது இன்ஸ்டா ரீல்ஸ் விடியோக்களை வெளியிட்டு வரும் அவரை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் பின்தொடருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.