Entertainment Tamil News: இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்ய துரித நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தொற்று எண்ணிக்கை அதிகம் காணப்படும் மாநிலமான கேரளாவில் மிகக் கடுமையான காட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன.
கொரோனா தொற்றின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட கேரளா, 2வது அலைக்கு ஓரளவு தாக்குப்பிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் நடந்த சட்ட பேரவை தேர்தலுக்கான முடிவை எதிர்நோக்கி காத்திருக்கும் அம்மாநிலம் தொற்றுக்கெதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் துரிபடுத்தி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை அம்மாநில காவல்துறையினர் கையிலெடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் யூடூபில் வெளியான 'என்ஜாய் எஞ்சாமி' பாடல், பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு போட்டது. மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வைரலாகியும் வந்தது.
மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட இந்த பாடலை கையிலெடுத்துள்ள கேரளா காவல் துறையினர், அதே மெட்டில் விழிப்புணர்வு வரிகளை கோர்த்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். மேலும் அவர்களே சாலையில் நடனமாடி அசதியுள்ளனர். அந்த பாடலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் அவசியம் பற்றியும், அனைவரும் மாஸ்க் அணிவதோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)