Entertainment viral Tamil News: தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். நடனத்தில் மிரட்டி எடுக்கும் இவர் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திர, தெலுங்கானா மட்டுமல்லாது நாடு முழுதும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தியல் வெளியாகிய படம் புஸ்பா. ஆந்திர வனப் பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதன் முதல் பாகம் தான் தற்போது வெளியாகியுள்ளது புஷ்பா : தி ரைஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்திற்கு பிரபல இசைமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து இருக்கிறார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.
படம் ஹிட் இல்லை…. பாடல் தான்…
கடந்த டிசம்பரில் வெளியாகி இந்த புஸ்பா படத்திற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் பேசப்படவில்லை. மேலும், தமிழ் டப் செய்யப்பட்டிருந்த இந்த படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கவில்லை.
எனினும், இப்படத்தின் பாடல்கள் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக ‘வாயா சாமி’ பாடல் பலரின் காலர் டியூனாக உள்ளது. தமிழில் இந்த பாடலை விஜய் டிவி புகழ் ராஜலக்ஷ்மி பாடியுள்ளார். மேலும், இந்த பாடல் சமூக வலைதளங்களில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. தவிர, சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அன்றாட ரீல்ஸ் வீடியோவாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.
என்னம்மா ராமரின் கலக்கல் நடனம்
தற்போது சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை நடனமாடி மகிழும் இந்த பாடலுக்கு, சமீபத்தில் விஜய் டிவியின் ஒரு ஷோ ஷூட்டின் போது பிரபலங்கள் பலரும் சேர்ந்து நடனமாடி இருக்கிறார்கள். குறிப்பாக, விஜய் டிவி புகழ் ராமர் நடனத்தில் கொளுத்தி எடுக்கிறார். அவருடன் பிரபலங்கள் பலரும் சேர்ந்து ஸ்டேப் போடுகின்றனர். சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“