2015 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ இலவச நெட் வழங்கிய சமயத்தில் தான், இந்தியா முழுவதும் யூடியூப் சேனல்கள் வளர ஆரம்பித்தன. அதில் தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது எருமசாணி யூடியூப் சேனல். அப்போது எருமசாணி ஹரிஜா என்றால் இளைஞர்கள் யாருக்கும் தெரியாமல் இருக்காது.
Advertisment
அந்தளவுக்கு இதில் ஹரிஜாவும், விஜயும் சேர்ந்து நடித்து அடித்த லூட்டிகளை பார்த்து ரசிக்காதவர்களும், சிரிக்காதவர்களும் இருக்க முடியாது. ஹரிஜாவின் வசிகரீக்கும் அழகும், அவரது நகைச்சுவையான நடிப்பும், ஒவ்வொரு வீடியோவின் முடிவிலும் விஜய்யை ‘போடா எருமா சானி’ என்று கத்துவது என ஹரிஜாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஹரிஜா நடித்த யூடியூப் வீடியோக்களின் மகத்தான வெற்றி அவருக்கு சினிமா துறையில் நுழைவதற்கான திருப்புமுனையாக அமைந்தது.
அதன்மூலம் ஹரிஜா தமிழில் ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார். அதர்வாவுடன் 100 மற்றும் சிவகார்த்திகேயனுடன் மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்தார்.
கேரளாவில் பிறந்த ஹரிஜா ஊட்டியிலும் கோவையிலும் வளர்ந்தார். கோவையில் உள்ள PSG கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். ஹரிஜாவின் கணவர் அமர் ரமேஷூம் அதேத் துறையில் தான் படித்தார். நண்பர்களாக இருந்த இருவரும், காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு அழகான ஆண்குழந்தை உள்ளது.
எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹரிஜா, அதில் அடிக்கடி தான் எடுத்த போட்டோஷூட்கள், கணவருடனான புகைப்படங்கள் என பதிவிடுவார். அவ்வப்போது ரசிகர்களுடனும் கலந்துரையாடுவார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை மட்டும் பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
இப்படி யூடியூப், சினிமா என்று பிஸியாக இருந்த ஹரிஜா திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தார். தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றினார். ஆனால் அது எருமசாணி அளவுக்கு பிரபலமாகவில்லை.. அதேபோல எருமசாணி சேனலில் விஜய், வேறொரு இணையுடன் நடித்து வீடியோ போட்டாலும் அது பழைய மாதிரி வைரலாகவில்லை.
விஜயும், ஹரிஜாவும் எப்போது ஒன்று சேர்ந்து வீடியோ போடுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரிஜா, எருமசாணி யூடியூப் சேனலில் நடித்துள்ளார். அதை பார்த்த பலரும், இது பழைய வீடியோவாக இருக்கும், அதைத் தான் மறுபடியும் அப்லோட் செய்துள்ளார்கள் என்று நினைத்தனர்.
ஆனால் உண்மையாகவே ஹரிஜா, மீண்டும் எருமசாணி சேனலில் நடித்தது தெரிந்து ரசிகர்கள் அவரை வெல்கம் பேக் ஹரிஜா என வாழ்த்தி வருகின்றனர். அதில் ஹரிஜாவை பார்க்க ஒரு குழந்தைக்கு தாய் போன்றே தெரியவில்லை. எருமசாணி சேனலில் நடிக்க ஆரம்பித்தபோது எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இருக்கிறார். தற்போது அந்த வீடியோ யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. இதுவரை 20 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
இதோ அந்த யூடியூப் வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “