Advertisment

தாய்லாந்து பீச்சில் விளையாடும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை; மாடர்ன் டிரஸ்ஸில் க்யூட் புகைப்படங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா தாய்லாந்து பீச்சில் ஜாலியாக விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Madhumitha

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா தாய்லாந்து பீச்சில் ஜாலியாக விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Madhumitha

எதிர் நீச்சல் சீரியலில்  ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை மதுமிதா, தற்போது தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ள நடிகை மதுமிதா தாய் பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சீரியல் நடிகை மதுமிதா, தமிழ் சீரியலில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகை மதுமிதா, 2018-ல் ஸ்டார் மாவில் ‘மனசுனா மனசாய்’ என்ற தெலுங்கு சீரியலில் அறிமுகமானார்.

Madhumitha

டிவி சீரியல்களில் நடித்து வந்த நடிகை மதுமிதா, ஸ்டார் சுவர்ணாவில் கன்னட தொலைக்காட்சி தொடரான ​​புட்மல்லி மூலம் தொடங்கினார் நடிகையாக அறிமுகமானார். 

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான நீலிமா என்ற புராணத் தொடரான ​​ஷனியில் மதுமிதா நடித்தார். அதுமட்டுமல்லாமல், உதய் டிவியில் ஒளிபரப்பான ஜெய் ஹனுமான் தொடரில் லட்சுமி தேவியாக நடித்தார். 

Madhumitha

நடிகை மதுமிதா, ஜீ தமிழின் பெரிய பட்ஜெட் தொடரான ​​பிரியாத வரம் வேண்டும் சீரியலில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 

தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும்  சன் டிவியின் எதிர் நீச்சல் சீரியலில் ஜனனியாக நடித்து வருகிறார். 

Madhumitha

டிவி சீரியல், சினிமா மட்டுமில்லாமல், நடிகை மதுமிதா விளம்பரங்களில் அதிகம் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் அதிக ஆர்மாஅக இருக்கும் மதுமிதா,  தற்போது தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ளார்.

நடிகை மதுமிதா, தாய்லாந்து பீச்சில் ஜாலியாக விளையாஉட்ம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மாடர்ன் டிரஸ்ஸில் மதுமிதாவின் க்யூட்டான புகைபடங்களைப் பார்க்கும் நெட்டிசன்கள் லைக்ஸ் கம்மெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment