எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வேல ராமமூர்த்தி படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாளை கொண்டாடியது குறித்து நெகிழ்ச்சியாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆனால் கடந்த சில ஆண்டு அவர் திடீரென மரணமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க வந்தவர் தான் நடிகர் வேல ராமமூர்த்தி.
தமிழில் எழுத்தாளர் நடிகர் என பன்முக திறமை கொண்ட வேல ராமமூர்த்தி, ஆதி குணசேகரன் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தொடக்கத்தில் மாரிமுத்து அளவுக்கு இல்லை என்று கூறினாலும் தற்போது ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொண்டு பழையபடி சீரியலை ரசிக்க தொடங்கியுள்ளனர். இதனால் எதிர்நீச்சல் சீரயில் மீண்டும் உச்சத்தை தொட்டு வருகிறது.
இதனிடையே நடிகர் வேல ராமமூர்த்தி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு மாலை அணிவித்த படக்குழுவினர், கேப் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கினர். மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சக நடிகர் நடிகைள் டெக்னீஷியன்கள் என பலரும் தங்களது சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதனால் கொண்டாட்டமாக இருந்த வேல ராமமூர்த்திக்கு சற்று அதிர்ச்சி அளிக்கும் சம்பவமும் நடந்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உலகெங்கிலும் உள்ள மக்கள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தபோது, சந்தோஷத்தில் நான் திக்கு முக்காடி போயிருக்கிறேன். அதே நேரத்தில் எனக்கு அதிர்ச்சியான செய்தியும் வந்துள்ளது. எனது பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்து சிலர் ரசிகர்களிடம் பண மோசடி செய்துள்ளனர்.
அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் பார்த்துக்கொள்கிறேன். மக்கள் யாரும் இதை நம்பி ஏமார்ந்துவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“