Advertisment

திருமணக் கோலத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை... வைரல் போட்டோஸ்

தமிழ் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி-யில் கலக்கி வரும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Ethirneechal actress

எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிபிரியா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி-யில் கலக்கி வரும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisment

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் கலக்கி வருகிறது. இயக்குனர் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு, லேசாக சரிவை சந்தித்தாலும், வேல ராமமூர்த்தி தனது மிரட்டலான நடிப்பின் மூலம் சீரியலைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். அதனால், எதிர்நீச்சல் சீரியல் டி.ஆர்.பி-யில் முன்னணியில் முன்னேறிக்கொண்டே செல்கிறது.

haripriya

எதிர் நீச்சல் சீரியலில் நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஹரிபிரியா. இவர் சின்னத்திரைக்கு கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமானார். அதன்பின், ப்ரியமானவளே, கண்மணி போன்ற பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகை ஹரிபிரியா கடந்த 2012-ம் ஆண்டு பிரபல சின்னத்திரை நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதன்பின் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஹரிபிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சின்னத்திரை நடிகை ஹரிபிரியா தற்போது திருமண கோலத்தில் பட்டு புடவை, நகைகளுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment