Advertisment

அரேபியன் குயின்... அழகில் அசத்தும் எதிர்நீச்சல் நடிகை : ரீசன்ட் க்ளிக்ஸ்

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் குடும்பத்தின் 3-வது மருமகள் நந்தினி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா இசை.

author-image
WebDesk
New Update
Ethirneechal Haripriya.

எதிர்நீச்சல் நடிகை ஹரிப்பிரியா

எதிர்நீச்சல் சீரியலில், நந்தினி கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஹரிப்பிரியா இசை தற்போது ராணி வேடத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் பிரபலமாக இருந்து வருகின்றனர். இதில் ஆதிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட அவரது மரணம் சீரியலுக்கு சற்று வீழ்ச்சியை கொடுத்தது.

அதே சமயம், மாரிமுத்து அளவுக்கு கவரவில்லை என்றாலும், தற்போது குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வேல ராமமூர்த்தி, ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல், சிறப்பாக வரவேற்பையும் நிலையான இடத்தையும் பெற்று வருகிறது. கோலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் இந்த எதிர்நீச்சல் சீரியலில், நடிகை கனிகா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்,

மேலும் பிரியதர்ஷினி, மதுமிதா ஆகியோர் குணசேகரன் வீட்டு மருமகள்களாக நடித்து வரும், இந்த சீரியலில், குணசேகரன் குடும்பத்தின் 3-வது மருமகள் நந்தினி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா இசை. குணசேகரன் கேரக்டருக்கு அவ்வப்போது பதிலடி கொடுக்கும் வகையில் நந்தினி கேரக்டரில் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹரிப்பிரியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அரேபியன் ராணி மாதிரியான கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், லைக்ஸை குவித்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ethirneechal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment