எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபலமான நடிகை மதுமிதா, தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுடன் பாலி தீவில் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மதுமிதா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவருக்கு, தமிழ் சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியல் நாள்தோறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பையும் தொற்றிக்கொள்ளும் வகையில் உள்ளது.
இந்த சீரியல் மூலம் நடிகை மதுமிதா தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துள்ள நிலையில், தனது சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது தனது பிறந்த நாளை முன்னிட்டு, நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக, சில நாட்களுக்கு முன்பே அவர்களுடன் இணைந்து பாலி தீவுக்கு சென்றுள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மதுமிதா, புதுவசந்தம் தொடரில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவியுடன் சென்றுள்ளார். அங்கு படகு சவாரி செய்வது போல் புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். எதிர்நீச்சல் சீரியலை விட்டுவிட்டு, குணசேகரனுக்கு தெரியாமல் ஜனனி இந்தோனேசியா சென்றுள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“