சன் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் புதிய வில்லனாக கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் அறிமுகம் ஆகியுள்ள நடிகர் கவனத்தைப் பெற்றிருக்கிறார். யார் இந்த நடிகர் என்று ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.
எதிர் நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான குணசேகரனாக நடித்துவந்த இயக்குனர், நடிகர் மாரிமுத்து காலமானதை அடுத்து, அவருடைய கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி அறிமுகம் செய்யப்பட்டார். இந்த நிலையில், எதிர் நீச்சல் சீரியலில் திங்கள்கிழமை எபிசோடில், புதிய வில்லனாக கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் அறிமுகம் ஆகி பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறார். இதனால், எதிர் நீச்சல் சீரியலில் புதிய வில்லனாக அறிமுகமாகி இருக்கும் கிருஷ்ணசுவாமி மெய்ய்ப்பன் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
எதிர் நீச்சல் சீரியலில் புதிய வில்லனாக கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் அறிமுகமாகி உள்ள நிலையில் அவருடைய உண்மையான பெயர் ஆர்.ஜே நெலு என்பது தெரியவந்துள்ளது.
எதிர் நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் சக்தி மற்றும் ஜனனிக்கு பிரச்சனையை கொடுக்கும் விதமாக புது வில்லன் கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் என்ற பெயரில் ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அவர் அறிமுகமான முதல் நாளே அவருக்கு ஆதி குனசேகரனுக்கு கொடுக்கப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் முதல் நாளே தன்னுடைய மிரட்டல் ஆன நடிப்பையும் காட்டி இருந்தார். நெற்றியில் திருநீறு, வெள்ளை வேஷ்டி சட்டை, தோளில் ஒரு பை என பவ்யமாக இருந்தாலும், டயலாகில் தான் ஒரு வில்லன் என்பதைக் காட்டி முதல் நாளே மிரட்டி இருக்கிறார். அதிலும், சக்தி மற்றும் ஜனனியிடம் தன்னை கிருஷ்ணப்ப சுவாமி மெய்யப்பன் (கிருஷ்ணா) என்று அறிமுகம் செய்தது மிரட்டலாக இருந்தது.
ஆர்.ஜே. நெலு நடிகராகவும், இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். ஆர்ஜே நெலு இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்தவர். இவர் இலங்கையில் உள்ள சக்தி டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஜி.பி.எஸ், கடலாய் காதல் என்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில்தான் ஆர்;ஜே. நெலு, தற்போது சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் மூலமாக கிருஷ்ணப்ப சுவாமி மெய்யப்பன் கிருஷ்ணாவாக எதிர் நீச்சல் சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் மீதான எதிர்ப்பார்ப்பு எதிர் நீச்சல் சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“