கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்த எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், முதல் பாகத்தில் நாயகி ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதாவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க உள்ளார்.
Advertisment
சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார்போல் அவ்வப்போது புதிய சீரியல்களை ஒளிபரப்புவதும், பழைய சீரியல்களை முடிப்பதும், டிவி நிர்வாகம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சன்டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த சீரியல் தான் எதிர்நீச்சல்.
கோலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் நடிகை கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த நிலையில், வில்லன் கேரக்டரில் பிரபல நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். இவர் இருந்தவரை எதிர்நீச்சல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்தது.
ஒரு கட்டத்தில் மாரிமுத்து இறந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக வந்த வேல ராமமூர்த்தி, மாரிமுத்து இடத்தை பூர்த்தி செய்ய தவறிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாக கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு ஒரு சில வாரங்களில் இந்த சீரியலின் சீசன் 2 ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியானது.
Advertisment
Advertisement
அதேபோல் முதல் சீசனில் ஜனனி கேரக்டரில் நடித்த நடிகை மதுமிதா 2-ம் பாகத்தில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன்பிடி தற்போது எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் பாகத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது. இதில் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை ஆகியோர் வரும் நிலையில், மதுமிதாவுக்கு பதிலாக நடிகை பார்வதி ஜனனி கேரக்டரில் நடித்துள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“