இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. 2022-ம் ஆண்டு தொடங்கிய எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு காரணம் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் யதார்த்தமான நடிப்புதான்.
திரைப்பட இயக்குநரான மாரிமுத்து சினிமாவில் நடிக்கத் தொடங்கி கவனம் பெற்றார். இதையடுத்து, எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பிரபலமானார். அவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது.
ஆனால், எதிர்பாராத விதமாக மாரிமுத்து இறந்ததால், அவருடைய கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடித்தார். மாரிமுத்து மரணத்திற்குப் பிறகு, எதிர்நீச்சல் சீரியலின் கதையின் போக்கு திசைமாறியது. இதையடுத்து, சில மாதங்களிலேயே எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்நீச்சல் சீரியலின் 2வது சீசன் எப்பொது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து, எதிர்நீச்சல் சீசன் 2 சீரியல் விரைவில் வருகிறது என தகவல் வெளியானது.
இதனிடையே, எதிர்நீச்சல் சீரியல் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த மதுமிதா 2-வது சீசனில் நடிக்கவில்லை என்று கூறினார். எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா எதிர்நீச்சல் 2 சீரியலில் இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலில் மதுமிதாவுக்கு பதிலாக ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் நடிகை யார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், யார் அந்த புதிய கதாநாயகி என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிகை பார்வதி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
தொலைக்காட்சியில் தொகுப்பாளினி பார்வதி, நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலில் கதாநாயகியாக பார்வதி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் எதிர்நீச்சல் 2 சீரியலின் புரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“