திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகம் கடந்த வருடம் முடிவடைந்தது. ஆணாதிக்கத்தை கூறும் வலுவான கதைக்களம் கொண்டிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முதலிடத்தில் இருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் எதிர்நீச்சல் 2-ம் பாகம் சன் டி.வியில் ஒளிபரப்பாகிறது. விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜனனி, ஈஸ்வரி உள்பட கதாநாயகிகள் நால்வரும் தொழில், வேலைக்கு சென்றுவிட்டனர்.
சிறையில் இருக்கும் குணசேகரன் விரைவில் வெளியே வரப்போவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கதிருக்கு குணசேகரன் சொத்து கைமாறியுள்ளது. இதனால் மீண்டும் பழைய கதிராக மாறி ஆணாதிக்கத்தை செலுத்துகிறார்.
இந்நிலையில், சிறையில் இருந்தபடியே குணசேகரன் அவர் மகன் தர்ஷனுக்கு திருமணம் பேச ஒரு குடும்பத்தை அனுப்புகிறார். இதை ஈஸ்வரி எதிர்கிறார். இப்படி பிரச்சனை உருவாகி உள்ள நிலையில், கதையில் ஒரு புது கேரக்டர் அறிமுகமாகிறது.
பேரழகி சீரியலில் நடித்து பெயர் பெற்ற காயத்ரி எதிர்நீச்சல்-2 சீரியலில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.