சிட்னி பிரிட்ஜ், மெல்லிய இசை, முட்டிப்போட்டு நடிகைக்கு ப்ரபோஸ் செய்த காதலன்!

வானத்துக்கு அடியில் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்தப் படத்துக்கு “ஆம்” என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார் ஈவ்லின் சர்மா. 

Evelyn Sharma engagement
Evelyn Sharma engagement

Evelyn Sharma Gets Engaged: நடிகை ஈவ்லின் சர்மாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சிட்னி ஹார்பர் பாலத்தில் தன் காதலன், டாக்டர் துஷான் பிந்திக்கு ’எஸ்’ என்று சொன்னதாக இந்த ”யே ஜவானி ஹை தீவானி” பட நடிகை கூறியுள்ளார்.

துஷான் ஒரு கிடார் கலைஞரிடம், தங்களுக்குப் பிடித்த பாடல்களை இசைக்க ஏற்பாடு செய்திருந்ததாக ஈவ்லின் கூறியிருக்கிறார். “கனவு நனவாகியிருக்கிறது! துஷானுக்கு என்னை நன்றாகத் தெரியும்” என முன்னணி ஊடகத்துக்கு தான் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஈவ்லின்.

 

View this post on Instagram

 

Yessss!!! ????????????????????

A post shared by Evelyn Sharma (@evelyn_sharma) on

அதோடு, தானும் துஷானும் சிட்னியில் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் ஈவ்லின் பகிர்ந்துள்ளார். அமைதியான சிட்னியின் பரந்து விரிந்த வானத்துக்கு அடியில் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்தப் படத்துக்கு “ஆம்” என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார் ஈவ்லின் சர்மா.

”திட்டமிடப் படாத ஒரு தேதியில், எங்கள் நண்பர்கள் மூலமாக நாங்கள் கடந்தாண்டு சந்தித்தோம். துஷான் மிகவும் ரொமாண்டிக்கானவர். என்னை விட அதிக சினிமாத்தனம் கொண்டவர்” எனத் தங்களது சந்திப்பை நினைவுக் கூறுகிறார். இருப்பினும் தனது திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. “தேதி நிர்ணயிக்கப்பட்டவுடன் அதற்கான தனி அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம். இப்போதைக்கு, நாங்கள் ஒன்றாக எங்கள் நேரத்தை அனுபவிக்க விரும்புகிறோம்” என்ற ஈவ்லின் பூரிப்பாகிறார்.

துஷான் ஆஸ்திரேலியாவில் வசிப்பதாலும், சிட்னி தனக்கு பிடித்த நகரங்களில் ஒன்றாக இருப்பதாலும், அங்கு செல்வதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என ஈவ்லின் கூறுகிறார். “ஆனால் இந்தியாவில் எங்களுக்கும் எப்போதும் ஒரு தளம் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக இது எங்கள் வீடு” என்கிறார் ஈவ்லின்.

தவிர, சமீபத்தில் வெளியான ‘சாஹோ’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் ஈவ்லின் அறிமுகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Evelyn sharma engaged with tushaan bhindi

Next Story
’திருமதி செல்வத்துக்குப்’ பிறகு ’கண்மணி’யில் கலக்கும் சஞ்சீவ்!Sanjeev Serial Artist, sun tv kanmani serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com