Advertisment

காங்கிரஸால் கூட இதைவிட சிறந்த படம் எடுத்திருக்க முடியாது: 'எமர்ஜென்சி' படத்தை பாராட்டிய நிபுணர்!

சென்சார் சான்றிதழ் நிலுவையில் உள்ள காரணத்தினால், எமர்ஜென்சி படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Emergency Movie

நடிகையும், பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் இயக்கம் மற்றும் நடிப்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வாரலாற்றை அடிப்படையாக கொண்ட படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுளள் நிலையில், காங்கிரஸ் கட்சியால் கூட இந்திரா காந்தி குறித்து இவ்வளவு சிறப்பான ஒரு படத்தை எடுக்க முடியாது என்று பிரபலம் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

Read In English: Even Congress could not have made a better film on Indira Gandhi: Expert who reviewed Kangana’s ‘Emergency’

பாலிவுட் சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வரும், கங்கனா ரனாவத், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே இவர், இயக்கி நடித்த எமர்ஜென்சி திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. முதலில் செப்டம்பர் 6-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத காரணஙகளால் செப்டம்பர் 18 என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் சென்சார் போர்டு இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்க பரிலீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் (CBFC) "பொருள் நிபுணராக" அழைக்கப்பட்ட வரலாற்று ஆசிரியர் மக்கன் லால், எமர்ஜென்சி திரைப்படத்தைப் பார்த்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்காக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசியபோது, காங்கிரஸால் கூட இந்திரா காந்தி குறித்து இப்படி ஒரு சிறந்த படத்தை செய்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர் மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையில் சக ஊழியராக இருந்த லால், என்.டி.ஏ 1 ஆட்சியின்போது, என்.சி.இ.ஆர்.டி (NCERT) இன் வரலாற்று பாடப்புத்தகங்களை இணைந்து எழுதியவர், “நான் கட்சியின் பெரிய அபிமானி அல்ல என்பது காங்கிரசுக்கு தெரியும். ஆனாலும், உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இந்திரா காந்தியின் அந்தஸ்து கொண்ட ஆளுமை மதிக்கப்பட வேண்டும்.

அந்தப் படத்தைப் பார்த்தபோது, எனது கருத்து என்னவென்றால், இந்திரா காந்தியைப் பற்றி இதுபோன்ற ஒரு சிறந்த வரலாற்றுப் படத்தை காங்கிரஸால் கூட எடுத்திருக்க முடியாது. கங்கனா உண்மைகளிலிருந்து 0.01% கூட விலகவில்லை. இருப்பினும், படத்தின் முடிவு குறித்து “எனது முக்கிய யோசனை என்னவென்றால், படம் இந்திரா காந்தியின் காட்சியுடன் முடிவடைகிறது. இது ஒரு சிக்கலை உருவாக்கும் என்று நான் உணர்ந்தேன். அவரது மரணத்துடன் படத்தை முடிப்பதற்குப் பதிலாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள் 20 முதல் 30 வினாடிகளில், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதைக் காட்ட வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன்.

அப்படி இல்லையேல் இது ஒருதலைப்பட்சமான படமாக மாறும் என்பதால் பிரச்சனையாகிவிடும்.  அதைச் சமநிலைப்படுத்த, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நீங்கள் உடனடியாகக் காட்ட வேண்டும். இதை எனது மூன்றரை பக்கக் குறிப்பில் எழுத்துப்பூர்வமாக (CBFCக்கு) சமர்ப்பித்திருந்தேன்,” என்று கூறியுள்ளார்.

செப்டம்பர் 18 விசாரணையின் போது,  மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது, படத்தின் சான்றிதழை மறுபரிசீலனை செய்யும் குழுவிற்கு அனுப்ப வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி முடிவு செய்துள்ளார். தேர்வாணையம் ஏற்கனவே யுஏ சான்றிதழுக்காக படத்தை அனுமதித்திருந்தது, ஆனால் பல சீக்கிய குழுக்களின் எதிர்ப்புகள் மற்றும் பிரதிநிதித்துவங்களை அடுத்து இது நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆதாரங்களின்படி, படத்தில் முக்கியமாக இரண்டு காட்சிகள் காரணமாக எதிர்ப்பு இருந்தது. “ஒரு காட்சியில் (படத்தின் ட்ரெய்லரில் இருந்து) சில சீக்கியர்கள் அப்பாவிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காணலாம், மற்றொரு காட்சியில் பிந்தரன்வாலே சஞ்சய் காந்தியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தனி சீக்கிய மாநிலத்திற்கு ஈடாக இந்திரா காந்தியின் கட்சிக்கு வாக்குகளைக் கொண்டுவருவதாக உறுதி அளித்தது போன்ற காட்சிகள் இருந்தது.

பல சீக்கிய அமைப்புகள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், படத்தில் சீக்கியர்கள் குறித்த கவலைகளை காரணம் காட்டி, படத்தின் வெளியீட்டை நிறுத்துமாறு நீதிமன்றங்களை அணுகின. இந்த சர்ச்சை முற்றிலும் தேவையற்றது என்று கூறியுள்ள லால், “பிந்தரன்வாலே ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதியா? பிந்தரன்வாலே ஒரு தனிநபர், சரியான பெயர்ச்சொல், கூட்டுப் பெயர்ச்சொல் அல்ல. சீக்கியர்களை தவறாக சித்தரிப்பது பற்றிய கேள்வி படத்தில் எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Kangana Ranaut
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment