Advertisment

கம்பெனி ஆர்டிஸ்ட்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்...பிக் பாஸை கலாய்த்த பிரபல நடிகை!

Ex contestant Kasthuri criticize Bigg boss viral tweet: பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படுவது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை; முன்னாள் போட்டியாளரான நடிகை கஸ்தூரி விமர்சனம்

author-image
WebDesk
New Update
கம்பெனி ஆர்டிஸ்ட்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்...பிக் பாஸை கலாய்த்த பிரபல நடிகை!

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை கஸ்தூரி, பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இன் ஒரு எபிசோடு கூட பார்க்காதவர்கள் யாராச்சும் இருக்கீங்களா என கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.

Advertisment

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், போட்டி விறுவிறுப்பை எட்டியுள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமையான நேற்று கமலஹாசன் பங்கேற்கும் சிறப்பு எபிஷோடு ஒளிப்பரப்பான நேரத்தில், இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு எபிசோடு கூட முழுசா பார்க்காத நபர் தன்னை போல யாராச்சும் இருக்கீங்களா கையை தூக்குங்க என நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டு இணையத்தில் வைரலாக்கினார். மேலும் அதில், ஒரு முழு எபிஷோடையும் பார்க்க முடியாதவர்களுக்கு ஆறுதல் அரவணைப்பு என்றும் பதிவிட்டு இருந்தார்.

நடிகை கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் நாங்கள் எல்லாம் முதல் சீசனில் இருந்தே பார்த்ததில்லை என கமெண்ட் போட்டு அவருக்கு கம்பெனி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். மேலும், சில நெட்டிசன்கள் அது வெறும் ஸ்க்ரிப்டட் ஷோ என்றும் அதில் ரியாலிட்டி இல்லை என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குபிடித்து இருக்கும் போட்டியாளர் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் எனும் நிலையில், அதனை கலாய்க்கும் விதமாக #100naal_velaivaipputhittam என்பதை போட்டு நடிகை கஸ்தூரி கலாய்த்துள்ளார்.

மேலும், #StarVijayTV, #companyArtists உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளையும் தனது ட்வீட்டில் போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பலரும் விஜய் டிவியின் கம்பெனி ஆர்டிஸ்ட் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்தவர்களையே வேறு வழியில்லாமல் இந்த நிகழ்ச்சியில் பிடித்துப் போட்டு ஷோ நடத்தி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

publive-image

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் விடாமல் கலாய்த்து வரும் நடிகை கஸ்தூரியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் தான். அவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். போட்டியிலிருந்து வெளியேறிய பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தனக்கு சம்பளமே கொடுக்கவில்லை என ட்வீட் போட்டு விஜய் டிவியிடம் மீண்டும் முழு சம்பளத்தையும் அவர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், சில நெட்டிசன்கள் நீங்களும் முன்னாள் போட்டியாளர் தானே என கேள்விகளை எழுப்ப, அதற்கு நான் சம்பளம் வாங்கி விட்டேன் என கூலாக பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.

மேலும் மற்றொரு ட்வீட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனும், அவர் கலந்துக் கொண்ட 3ஆவது சீசனும் மட்டுமே நல்லா இருந்ததாகவும் நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

அடுத்ததாக நெட்டிசன் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துக் கொண்டபோது, நான் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் உண்மையாகவே இவர்கள் உங்களை விட சிறந்தவர்கள் என பதிவிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், நீங்கள் பார்த்ததின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டாம், அவர்கள் காட்டும் கதை உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vijay Tv Kasthuri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment