நான் அப்பா ஆகிட்டேன்: துள்ளி குதிக்கும் ‘பிக்பாஸ்’ பிரபலம்!

பாரம்பரிய முறையில் சீமந்தம் நடந்து முடிந்தது

’அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன்’ போன்றப் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.

அதோடு பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்பாளராகக் கலந்துக் கொண்டு, நேர்மையானவர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

சின்னத்திரை நடிகையான நிஷா கிருஷ்ணனை கணேஷ் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் தான் அப்பாவகியிருக்கும் விஷயத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கணேஷ். ”புது வரவை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்கிறேன். என் மனைவி நிஷாவுக்கு உங்களது ஆசிர்வாதத்தை வேண்டுகிறேன். பாரம்பரிய முறையில் சீமந்தம் நடந்து முடிந்தது” என்ற பதிவோடு அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதற்கு திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் கணேஷ் – நிஷா தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிக்பாஸில் கலந்துக் கொண்ட சுஜா வருணி கர்ப்பமான விஷயத்தை அவரது கணவர் சிவக்குமார் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கணேஷ் அப்பாவாகப் போகும் விஷயத்தைத் தெரிவித்துள்ளார். பிக்பாஸில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து பெற்றோர்களாகும் விஷயத்தைக் கேள்விப்பட்டு, ரசிகர்களும் மகிழ்ந்துள்ளார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close