Face App: இணையத்தில் தற்போது ஹாட் டிரெண்ட் ஃபேஸ் ஆப் தான். அதாவது வயதான பிறகு நாம் எப்படி இருப்போம் என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆப் தான் அது.
இந்த ஆப் செலிபிரிட்டிகளையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட் நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான், ஹாலிவுட் பிபலங்கள் நிக் சகோதரர்கள் என அனைவரும் தங்களது ஃபேஸ் ஆப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
வருண் தவான்
பாலிவுட்டில் முதன் முதலில் இந்த ஃபேஸ் ஆப்பை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராமில் அந்த படத்தை வெளியிட்ட நபர் நடிகர் வருண் தவான் தான். ’70 வயதில் நான் இப்படி தான் இருப்பேன். நோட் பண்ணிக்கோங்க: அப்போதும் பயிற்சியை விட மாட்டேன். ஆனால் நிறைய பேர் நினைப்பார்கள், அனில்கபூர் அவரது 100-வது வயதில் இப்படி இருப்பாரென்று’ என இதற்கு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார் வருண்.
அர்ஜுன் கபூர்
ஃபேஸ் ஆப் ஃபில்டரை பயன்படுத்திய அர்ஜூன் கபூரும் அவருடைய படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருக்கிறார். ’வயதான் பிறகு இப்படி தான் இருப்பேன்’ என அவர் குறிப்பிட்டிருந்ததற்கு, ‘பெட்டர்’ என பரினிதி சோப்ராவும், ’குட் லுக்கிங் ஓல்டு மேன்’ என சஞ்சய் கபூர் கமெண்ட் செய்திருந்தார்.
ஜோனஸ் சகோதரர்கள்
பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ் தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து இந்த ஃபேஸ் ஆப்பை முயற்சி செய்துள்ளார். ’3000-ம் ஆண்டில் ட்ரிப் சென்ற போது’ என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளனர்.
அனில் கபூர்
ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்த படத்தை அனில் கபூர் போஸ்ட் செய்திருந்தார்.