அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் தாய் தந்தையாக நடித்தவர்கள் உண்மையான மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் மற்றும் தந்தை எனக் குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத் தன்மையை நியூஸ்மீட்டர் இணைய தளம் சார்பார்த்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது. ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் தாய் தந்தையாக நடித்தவர்கள் உண்மையான மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் மற்றும் தந்தை எனக் குறிப்பிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் தாய் தந்தையாக நடித்தவர்கள் உண்மையான மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் மற்றும் தந்தை எனக் குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் இணைய பக்கம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
உண்மை தன்மையை கண்டறிய அமரன் திரைப்படத்தில் நடித்தவர்கள் குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது, மேஜர் முகுந்த் வரதராஜனின் தாயாக (கீதா வரதராஜன்) கீதா கைலாசம் என்பவரும் தந்தையாக (வரதராஜன்) ராஜூ ராஜப்பன் என்பவரும் நடித்திருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அவர்கள் குறித்து தேடப்பட்ட நிலையில், கீதா கைலாசத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் கிடைத்துள்ளது. அதில், தன்னை ஒரு நடிகர் என்று குறிப்பிட்டு லப்பர் பந்து, அமரன், ஸ்டார், அங்கம்மாள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ராஜு ராஜப்பன் குறித்து தேடியபோது, கமலா ராமானுஜம் என்ற யூடியூப் சேனலில், ராஜு ராஜப்பனின் நேர்காணல் ஒன்று கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில் அவர் மேடை நாடக் கலைஞர் என்றும், பல்வேறு மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனுக்கு தாய் தந்தையாக நடித்த இருவரும் தொழில் முறை நடிகர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மையான தாய் தந்தை குறித்து தேடிய போது. அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்ட போது என்.டி.டி.பி ஊடகம் அவரது தாய் தந்தையிடம் எடுத்த பேட்டி ஒன்றை 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்.டி.டி.பி யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதில், இருப்பவர்களும் அமரன் திரைப்படத்தில் நடித்தவர்களும் வெவ்வேறானவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதியில், நியூஸ் மீட்டர் தேடலில் முடிவில் முகுந்த் வரதராஜனின் தாய், தந்தையாக அமரன் திரைப்படத்தில் நடித்தவர்கள் உண்மையான மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் தந்தையர் இல்லை என்பதும், அவர்கள் இருவரும் தொழில்முறை நடிகர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உண்மைச் சரிபார்ப்பு நியூஸ்மீட்டர் (Newsmeter.in) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.