'ரத்னவேலு' கதாபாத்திரத்தை ஜாதிப் பெருமை பேசும் பாடல்களுடன் இணைத்து கொண்டாடி வரும் நிலையில், தனது 'ஃபேஸ் புக்' கவர் போட்டோ-வை நீக்கியுள்ளார் ஃபகத் ஃபாசில்.
'ரத்னவேலு' கதாபாத்திரத்தை ஜாதிப் பெருமை பேசும் பாடல்களுடன் இணைத்து கொண்டாடி வரும் நிலையில், தனது 'ஃபேஸ் புக்' கவர் போட்டோ-வை நீக்கியுள்ளார் ஃபகத் ஃபாசில்.
ஜூலை 27ம் தேதி மாமன்னன் படம் ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ்-சில் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் வடிவேலு, உதயநிதியை தவிர்த்து விட்டு ஃபகத் ஃபாசிலை மட்டும் கொண்டாடி வருகின்றனர்.
Fahadh Faasil - ‘Maamannan' movie Tamil News: பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் மாரிசெல்வராஜ் இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய படம் மாமன்னன். இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார். அவரது தந்தையாக வடிவேலு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். வில்லன் 'ரத்னவேலு' கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார்.
Advertisment
மாமன்னன் வெளியாகிய போது படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களான வடிவேலு, உதயநிதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரது நடிப்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது. படம் குறித்து ஏராளமான மாறுப்பட்ட கருத்து இருந்தாலும், படத்தை வெற்றிப் படம் என்று குறிப்பிட்டது தயாரிப்பு நிறுவனமான 'ரெட் ஜெயண்ட்'.
நெட்பிளிக்ஸ்-சில் மாமன்னன்
ஜூலை 27ம் தேதி மாமன்னன் படம் ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ்-சில் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் வடிவேலு, உதயநிதியை தவிர்த்து விட்டு ஃபகத் ஃபாசிலை மட்டும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 'மாமன்னன்' படம் வெளிவருவதற்கு முன்பு, மேடையில் பேசிய மாரி செல்வராஜ், கமலின் 'தேவர் மகன்' படத்தின் தாக்கம்தான் இந்தக் கதாபாத்திரம் எனக் கூறியிருந்தார். அதில் இசக்கியாக நடித்த வடிவேலு கதாபாத்திரத்தின் நீட்ச்சியே 'மாமன்னன்' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
Advertisment
Advertisements
அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும், அவரை கமல் ரசிகர்கள் கடுமையாக விமர்த்தனர். இது தேவையில்லாத பிரச்னை எனவும் கருத்துகள் வெளியாகின. மறுபுறம் சாதிய அடக்குமுறைக்கு எதிராக மாரிசெல்வராஜின் பேச்சை முற்போக்கு கருத்தாளர்கள் வரவேற்றனர். இப்படம் உதயநிதியின் கடைசி படம் என்றும் கூறப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த ரத்னவேலு
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஃபகத் ஃபாசிலின் ரத்னவேலு கதாபாத்திரத்தை ஜாதிப் பெருமை பேசும் பாடல்களுடன் இணைத்து நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை குறிக்கும் ஆடியோவை அவர் நடித்த வீடியோவுடன் இணைத்து அவர்கள் பரப்பினர். இந்தப் பாடல்கள் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகின. தவிர, 'மாமன்னன்' பட ஃபகத் ஃபாசிலின் புகைப்படங்களும் சமூக வலைதள பக்கத்தில் பரவின.
ஃபகத் ஃபாசில் அவரது 'ஃபேஸ் புக்' கவர் போட்டோ 'மாமன்னன்' படத்தின் 'ரத்னவேலு' கதாபாத்திரம் புகைப்படங்களை வைத்திருந்தார். ரசிகர்கள் அந்த கதாபாத்திரத்தை ஜாதிப் பெருமை பேசும் பாடல்களுடன் இணைத்து சிலர் கொண்டாடி வரும் நிலையில், தனது 'ஃபேஸ் புக்' கவர் போட்டோ-வை நீக்கியுள்ளார் ஃபகத் ஃபாசில். தற்போது அதையும் நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil