/indian-express-tamil/media/media_files/2025/09/10/fahadh-faasil-team-up-with-prem-kumar-meiyazhagan-96-movie-fame-tamil-news-2025-09-10-14-36-53.jpg)
தனது அடுத்த படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலுடன் கூட்டணி சேரும் இயக்குநர் பிரேம்குமார், அந்த படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து, அரவிந்த் சாமி, கார்த்திக் நடிப்பில் இவர் இயக்கிய ‘மெய்யழகன்’ திரைப்படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இவ்வாறு ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான படங்களை கொடுத்து வரும் இயக்குநர் பிரேம்குமார் தனது அடுத்த படத்தில் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை ஆக்ஷன் திரில்லர் படமாக எடுக்க பிரேம்குமார் திட்டமிட்டுள்ளாராம். இப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பிரேம்குமார், “ஃபஹத் பாசிலுடன் நான் செய்யும் படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இந்த படத்தில் உங்களை நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய எமோஷனல் ஃபேக்டர் இருக்கும். அடுத்ததாக ஒரு இரண்டு, மூன்று கதைகள் இருக்கிறது. நடிகர் விக்ரம் உடனான படம் முழுவதும் எழுத வேண்டும். நான் இப்போது எடுக்கும் இந்த படம் நான்கு வருடங்களுக்கு முன்பே எனது மனதில் தோன்றிவிட்டது. இது திரில்லர் என்பதால் உடன் இருப்பவர்கள் தாமதமாக எடுக்க சொன்னார்கள்.
ஃபஹத் பாசிலுக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது. வெறும் 45 நிமிடங்கள் மட்டும் தான் கதையை கூறினேன். கதை கூறும் போது அவர் முகத்தில் இருந்த எக்ஸ்பிரஷனை பார்த்து எனக்கு உற்சாகமாக இருந்தது. இது நேரடி தமிழ் படம் தான். இந்த படத்திற்கு பிறகு பெரிய பிரேக் எதுவும் எடுக்கமாட்டேன். நான் தனிமையை விரும்புகிற ஒரு ஆள் என்பதால் குறைவான நடிகர்களை வைத்து படம் எடுக்கிறேன் என்று நினைக்கிறேன். எனக்கு அது இலகுவாக வருகிறதா என்று தெரியவில்லை. நான் எடுக்கும் அட்வென்சர் படத்தில் மொத்தமாகவே ஒன்பது பேர் தான் இருப்பார்கள்.
நான் இப்போது எடுக்கப்போகும் படத்தில் இன்னும் குறைவான சில விஷயங்கள் செய்யப்போகிறேன். அது ஒரு அனுபவமாக இருக்கும். ஒரு லவ் ஸ்டோரி இருக்கிறது. அது ஒரு ஐந்தாவது படமாக பண்ணுவேன். அது இன்னும் ஒரு புது சூழலாக இருக்கும். இது எல்லாம் நான் யோசித்து செய்வதோ, இல்லை வித்தியாசமான படம் நான் செய்கிறேன் என்று எடுப்பதில்லை அந்த கதையின் தன்மையை அதுதான்” என்று அவர் கூறியுள்ளார்.
"My Next film is with #FahadhFaasil😲, It'll be a thriller with Action, but my core emotion touch will be there♥️🔥. Narrated 45 mins to Fafa & he liked a lot👌. It's direct Tamil film & shoot from Jan🎬. #ChiyaanVikram film will be delayed👀"
— AmuthaBharathi (@CinemaWithAB) September 9, 2025
- #Premkumarpic.twitter.com/YL1IVVYMrm
96 படத்தின் இரண்டாம் பாகத்தின் போது நடிகர் விஜய் சேதுபதிக்கும் இயக்குநர் பிரேம்குமாருக்கும் ஏற்பட்ட மோதலால் ‘96’ இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது. இதனிடையே, ‘மாவீரன்’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் விக்ரமின் சம்பளம் மற்றும் படத்தின் கதை காரணமாக கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், விக்ரம் - பிரேம் இணையும் படம் படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில் விக்ரம் கதையில் சிறு மாற்றங்கள் செய்ய பிரேம் அதை மறுத்துவிட்டதால் கடுப்பான விக்ரம் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.