கல்யாணத்துக்கு குதிரையில் கிளம்பிய ஹீரோ... கோமா ஸ்டேஜ் போனது எப்படி? ஓடும் குதிரை சாடும் குதிரை ஓ.டி.டி ரிலீஸ்!

'ஓடும் குதிரை சாடும் குதிரை' திரைப்படம், செப்டம்பர் 26 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. அல்தாஃப் சலீம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஃபகத் ஃபாசில் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'ஓடும் குதிரை சாடும் குதிரை' திரைப்படம், செப்டம்பர் 26 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. அல்தாஃப் சலீம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஃபகத் ஃபாசில் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Fahadh-Kalyani

கல்யாணத்துக்கு குதிரையில் கிளம்பிய ஹீரோ... கோமா ஸ்டேஜ் போனது எப்படி? ஓடும் குதிரை சாடும் குதிரை ஓ.டி.டி ரிலீஸ்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான ஃபகத் ஃபாசில், மலையாள ரசிகர்களைத் தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். இவரது நடிப்பில், நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனுடன் இணைந்து, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'ஓடும் குதிரை சாடும் குதிரை' திரைப்படம், வரும் செப்.26 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Advertisment

படத்தின் கதைக்களம்:

அல்தாஃப் சலீம் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், ஃபகத் ஃபாசில் நடிக்கும் ஒரு பர்னிச்சர் கடை ஊழியரான அபி-யின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. பணியின் நிமித்தம் வெளியே செல்லும் அபி, அங்கு நிதி (கல்யாணி ப்ரியதர்ஷன்) என்ற பெண்ணைச் சந்திக்கிறார். தனது காதல் வாழ்க்கையில் ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கும் நிதி, அபியுடன் காதலில் விழுகிறார்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில், மாப்பிள்ளையாகக் குதிரையில் வந்து திருமண மண்டபத்திற்குள் நுழைய வேண்டும் என நித்தி ஆசையாகக் கேட்கிறார். காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, குதிரையில் புறப்படும் அபிக்கு எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. குதிரை திமிறிக் குதித்ததால், கீழே விழுந்த அபிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் கோமா நிலைக்குச் செல்கிறார். இந்த விசித்திரமான மற்றும் நகைச்சுவை நிறைந்த கதையில் ஃபகத் ஃபாசில் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷனின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. 

கோமாவில் இருந்து அபி மீண்டாரா, நிதியைத் திருமணம் செய்துகொண்டாரா போன்ற கேள்விகளுக்கு, நகைச்சுவை மற்றும் சாகசங்களுடன் கூடிய பதில் அளிக்கிறது இந்தப் படம். மேலும், இப்படத்தில் ஃபகத் ஃபாசில் வழக்கமான ஹீரோக்களுக்குப் பொருந்தாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவு ஜின்டோ ஜார்ஜ், படத்தொகுப்பு நிதின் ராஜ் ஆரோல், இசை ஜஸ்டின் வர்கீஸ் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு அஸ்வினி காலே ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Advertisment
Advertisements

வழக்கமான சினிமாக்களைத் தாண்டி, ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை விரும்புபவர்களுக்கு 'ஓடும் குதிரை சாடும் குதிரை' ஒரு சரியான தேர்வாக இருக்கும். திரையரங்குகளில் பார்க்கத் தவறியவர்களுக்கு, இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: