தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை த்ரிஷா பல சொத்துக்களை வைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் இவர் விற்பனை செய்த பழைய வீட்டை, பழம்பெரும் நடிகர் பானு சந்தர் வாங்கியுள்ளார். தற்போது அவர் இந்த வீட்டை வாங்கியது குறித்தும் அதில் செய்துள்ள மாற்றங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய பானு சந்தர், பாலுமகேந்திராவின் மூடுபனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, அருண் விஜய் நடித்த 'ஓ மை டாக்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் உட்பட, ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றினார். தெலுங்கு சினிமாவில் பணியாற்றிய அதே வேளையில், தொழில்துறையிலும் தீவிரமாக ஈடுபட்ட பானு சந்தர், சில கன்னட படங்களில் நடித்தார்.
இதனிடையே தற்போது நடிகை த்ரிஷாவின் பழைய வீட்டை விலைக்கு வாங்கியுள்ள நடிகை பானு சந்தர், இந்தியா க்ளிக்ஸ் தமிழ் உடனான சமீபத்திய நேர்காணலில், த்ரிஷாவின் பழைய வீட்டை வாங்குவதற்கான தனது முடிவைப் பற்றியும், அந்த வீட்டில் செய்த மாற்றங்கள் பற்றியும் அதற்கு காரணமாக இருந்த அவரது மனைவிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த வீட்டில் அவர்கள் செய்த மாற்றங்களில் ஒன்று, நுழைவாயிலில் அமைந்துள்ள ஒரு மினி-பாரை அழகு சாதனப் பொருட்களை சேமிப்பதற்கான இடமாக மாற்றியது. அவரது மனைவியும் வீட்டைச் சுற்றி பச்சை துளசி செடியை நட்டுள்ளார். பானு சந்தர் தாவரங்கள் மீது அவருக்கு இருந்த அன்பின் காரணமாக தனது மனைவியின் செயலை பாராட்டுள்ளார். 72 வயதான நடிகர் அவர் இப்போது தனது குடும்பத்துடன் அனுபவிக்கும் அமைதியான வாழ்க்கையில் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.
பானு சந்தரின் இளைய மகன் சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார், அதே நேரத்தில் அவரது மூத்த மகன் ஜெயந்த் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதையும் பெருமையுடன் பகிர்ந்துகொண்ட பானு சந்தரின் சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில், வீட்டை பானு சந்தரிடம் விற்பனை செய்த நடிகை த்ரிஷா கடைசியாக சமீபத்தில் வெளியான கோட் படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். தற்போது அஜித்துடன் விடா முயற்சி, குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“