உச்சத்தில் இருந்த போதே நடிப்புக்கு குட்பை சொன்ன நடிகை; இப்ப இவர் ஜோசியர்; பல கோடிக்கு அதிபதி: யார் தெரியுமா?

உச்சத்தில் இருந்த நடிகை ஒருவர் திடீரென ஜோசியராக மாறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உச்சத்தில் இருந்த நடிகை ஒருவர் திடீரென ஜோசியராக மாறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
dulip

உச்சத்தில் இருந்த போதே நடிப்புக்கு குட்பை சொன்ன நடிகை; இப்ப இவர் ஜோசியர்; பல கோடிக்கு அதிபதி: யார் தெரியுமா?

சினிமாத் துறையில் நுழையும் கதாநாயகிகள் பலரும் பல கனவுகளுடன் வருகின்றனர். தனது திறமையால் திரைத்துறையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்கின்றனர். பின்னர் நட்சத்திர அந்தஸ்தை பெரும் நடிகைகள் அழகு சாதனங்கள் விற்பனை, ஓட்டல், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.

Advertisment

இப்படி திரைத்துறையை தாண்டி தங்களால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வருகின்றனர். பலரும் ஸ்டியோ போன்றவற்றை நிறுவி வாடகைக்கு விட்டு வருகின்றனர். இப்படி பலரும் பல வேலைகளை செய்து வரும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் ஜோசியராக மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘மேரே யார் கி ஷாதி ஹை’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை துலிப் ஜோஷி. இந்த படத்தில் உதய் சோப்ரா, ஜிம்மி ஷெர்கில், பிபாஷா பாசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த ரொமான்டிக், காமெடி படத்தை சஞ்சய் கத்வி இயக்கினார். 

இதைத்தொடர்ந்து, 'மேரே யார் கி ஷாதி ஹை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பின்னர்,  'ஏர்லைன்ஸ்', 'தில் மாங்கே மோர்', 'மிஷன் 90 டேஸ்', 'ரன்வே', 'தோகா', 'மாத்ருபூமி', 'சூப்பர் ஸ்டார்', 'பச்சன்', 'ஜட் ஏர்வேஸ்' மற்றும் 'ஜெய் ஹோ' போன்ற திரைப்படங்களிலும், சில பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

இந்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த துலிப் ஜோஷி , கேப்டன் வினோத் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகை துலிப் ஜோஷி மிகப்பிரபலமாக இருந்தபோதே சினிமாவில் இருந்து விலகி ஜோதிடத் துறையில் தடம் பதித்தார்.

தற்போது சிறந்த ஜோதிடராகவும் இருந்து வருகிறார். தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைத் தளத்தில் அவ்வப்போது தியானம் மற்றும் யோகா வீடியோக்களை நடிகை துலிப் ஜோஷி பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2000 -ஆம் ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட துலிப் ஜோஷியால் இறுதி வரை செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: