இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..? ரோஜா சீரியலில் திடீர் என்ட்ரி கொடுக்கும் சீனியர் நடிகை!
Famous Actress Entry in Sun Tv Roja Serial soon Tamil News டிஆர்பியில் பின்னடைவு அடைகிறதே என்று எண்ணிய இயக்குநர், எக்ஸ்ட்ரா சுவாரசியம் கூட்டுவதற்காக, பிரபல நடிகையைக் களமிறக்கவுள்ளார்.
Famous Actress Entry in Sun Tv Roja Serial soon Tamil News டிஆர்பியில் பின்னடைவு அடைகிறதே என்று எண்ணிய இயக்குநர், எக்ஸ்ட்ரா சுவாரசியம் கூட்டுவதற்காக, பிரபல நடிகையைக் களமிறக்கவுள்ளார்.
Famous Actress Entry in Sun Tv Roja Serial soon Tamil News
Famous Actress Entry in Sun Tv Roja Serial soon Tamil News : 'இது என்னடா ரோஜாவுக்கு வந்த சோதனை' என்றபடி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் இரவு 9 மணிக்கு குமுறிக்கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த சின்னதிரையில் ஏராளமான சீரியல்கள் என்ட்ரி கொடுத்தாலும், நீண்ட நாள்களாக டிஆர்பி-ல் முதல் இடத்தில் இருப்பது ரோஜா தொடர்தான்.
Advertisment
கடந்த சில வாரங்களாக டிஆர்பி-ல் பின்னடைவு அடைந்திருந்தாலும், பார்க் இந்திய நிறுவனத்தின் டிஆர்பி பட்டியலில் இன்றும் முதல் இடத்தில் இருப்பது ரோஜா தொடர்தான். ஊரே மெச்சும் பெரிய குடும்பத்தின் சொந்த பேத்தி யார், தொலைந்து போன வீட்டின் மருமகள் எங்கே, கதாநாயகிக்கு உறுதுணையாக இருக்கும் கணவர் மற்றும் அவருடைய குடும்பம், அவர்களை எதிர்த்து சதித்திட்டம் தீட்டும் வில்லி எனப் பழைய கதை என்றாலும், மக்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தி இந்த சீரியலில் உள்ளது.
தங்களின் குடும்பத்தில் நடக்கும் சட்ட சிக்கல்களைப்போலவே இருக்கிறதே என்றபடி பலரும் ரோஜாவிற்காக மனமுருகிப் பார்க்கும் இந்த சீரியலில் திடீர் ட்விஸ்ட் காத்துக்கொண்டிருக்கிறது. ஆம், டிஆர்பியில் பின்னடைவு அடைகிறதே என்று எண்ணிய இயக்குநர், எக்ஸ்ட்ரா சுவாரசியம் கூட்டுவதற்காக, பிரபல நடிகை நளினியைக் களமிறக்கவுள்ளார்.
Advertisment
Advertisements
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று, தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கும் ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார் நளினி. இதனால், மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். சரிதான், மீண்டும் ரோஜாவின் டிஆர்பி உச்சிக்குப் போய்விடும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil