/indian-express-tamil/media/media_files/2025/10/06/jab-2025-10-06-16-03-56.jpg)
தெலுங்கில் ஒளிபரப்பாகும் ‘ஜெபர்தஸ்த்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் வர்ஷா. இவர் ‘ஜெபர்தஸ்த்’ வர்ஷா என்றே அழைக்கப்படுகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான வர்ஷா நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ‘கிசிக் டாக்ஸ்’ (Kissik Talks) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய நடிகை வர்ஷா, “நான் எப்போதும் மது அருந்துகிறேன். என் மனதில் புத்துணர்ச்சியை உணர மட்டுமே நான் குடிக்கிறேன். நண்பர்களுடன் விருந்துக்கு சென்றால் எனக்கு 2 பெக் ரெட் ஒயின் வேண்டும்.
இதைப் பற்றி பொய் சொல்ல எனக்கு பிடிக்காது. ஆனால் குடிப்பது ஒரு பழக்கமாக மாறக் கூடாது. மது அருந்திய உடன் ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வரும். அது என்னவென்றால் ஒரு இயக்குநர் என்னை வெறுப்புடன் பார்த்தார். அதுதான் நினைவுக்கு வரும். அதனால் நான் விருந்துகளுக்கு செல்வதை நிறுத்தி விட்டேன்." என்று கூறினார்.
நடிகை வர்ஷாவின் இந்த கருத்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகை பொதுவெளியில் மிக தைரியமாக நான் மது அருந்துவேன் என்று கூருகிறாரே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் பொதுவெளியில் தான் மது அருந்துவேன் என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும். அது வர்ஷாவிடம் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக, சினிமாவில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் மது அருந்துவதாக கூறப்படுகிறது. இவர்கள் பார்டி மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது மது அருந்துவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழில் வெளியான 'Bad Girl’ பட நடிகை அஞ்சலி சிவராமன் மது அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை அஞ்சலி சிவராமன் தனது தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்ற போது தனது தோழிகளுடன் சேர்ந்து பீர் அருந்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான, புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாய் பரவியது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகை அஞ்சலி சிவராமன் உண்மையாகவே Bad girl தான் போல என்று கமெண்ட் செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.