10-ம் வகுப்பில் 54% மார்க்; பள்ளி முதல்வரிடம் அடி... பாலிவுட்டை கலக்கும் இந்த ஸ்டார் யார் தெரியுமா?

10-ஆம் வகுப்பில் 54 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்சி பெற்ற பாலிவுட் நடிகர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

10-ஆம் வகுப்பில் 54 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்சி பெற்ற பாலிவுட் நடிகர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
ranbir

10-ம் வகுப்பில் 54% மார்க்; பள்ளி முதல்வரிடம் அடி... பாலிவுட்டை கலக்கும் இந்த ஸ்டார் யார் தெரியுமா?

பாலிவுட்டின் பணக்கார நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர். இவர் பல படங்களில் நடித்து சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

Advertisment

நடிகர் ரன்பீர் கபூர், பழம்பெரும் பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட்டின் இளைய மகள் ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் தனது பள்ளி பருவம் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அவர் பேசியதாவது, “பள்ளியில் எப்போதும் நம்மை வித்தியாசமாக நடத்துவதில்லை. 40 மாணவர்களில் நீங்கள் சிறப்பு வாய்ந்தவராக உணரும் போது மற்றவர்கள் உங்களை ஆர்வக்கோளாறு என்று கூறுவார்கள்.
நான் படித்த பள்ளி மிகவும் கண்டிப்பான பள்ளி. 

நான் பள்ளி முதல்வரிடம் நிறைய அடிவாங்கியுள்ளேன். ஒரு முறை பள்ளி முதல்வர் என்னை கன்னத்தில் அறைந்தார். நான் நன்கு படிக்கும் மாணவன் எல்லாம் இல்லை. வகுப்பில் கடைசி மூன்று பேரில் ஒருவனாக இருந்தேன். 

Advertisment
Advertisements

ஆனால், பாடங்களில் தோல்வி அடையமாட்டேன். எனது 10-ஆம் வகுப்பில் 54.3 சதவிகிதம் மதிப்பெண் பெற்றேன். என் அம்மா மும்பையில் இருந்து அழுது கொண்டே எனக்கு போன் செய்தார். நான் 10-ஆம் வகுப்பில் தேர்சி பெற்றதை அவரால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் பள்ளியில் தேர்ச்சி பெற்றது நான் மட்டும் தான்” என்றார்.  

நடிகர் ரன்வீர் கபூர் தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ’ராமாயணா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

தொடர்ந்து, இரண்டாம் பாகம் 2027-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் ரன்பீர் கபூரின் தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் நடிக்க நடிகர் ரன்பீர் கபூர் ரூ.150 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இவர் விரைவில் ’பிரம்மாஸ்திரா 2’  மற்றும் ஆலியா பட் உடன் ’லவ் அண்ட் வார்’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

Cinema Ranbir Kapoor

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: