/indian-express-tamil/media/media_files/2025/09/26/27-down-2025-09-26-20-32-04.jpg)
டீக்கடையில் வேலை, அமெரிக்காவில் சினிமா படிப்பு; இந்த இயக்குனரின் முதல் படம் 2 தேசிய விருது வென்றது; இந்த சாதனை நாயகன் யார்?
கடந்த 1974-ஆம் ஆண்டு இயக்குநர் அவதார் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘27 டவுன்’. காலத்தால் அழியாத காவியமான இந்த படைப்பு இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படைப்பாகவே உள்ளது.
இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது. மேலும், இந்திய சினிமாவில் ஒரு மையில்கல்லாகத் திகழ்கிறது. இந்த படத்தை இயக்கிய இயக்குநர் அவதார் கிருஷ்ணா கவுலின் நிஜ வாழ்க்கையும் இந்த படத்தை போலவே மனதை தொடும் கதையாக உள்ளது.
அதாவது, காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஃபதேக்கடல் பகுதியில் செப்டம்பர் 27, 1939 அன்று பிறந்த அவதார் கிருஷ்ணா கவுல். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் பல நிதி தொடர்பான சவால்களை எதிர்கொண்டார்.
வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவதார் கிருஷ்ணா கவுல் தனது தந்தையால் வீட்டிலிருந்து வெறியேற்றப்பட்டார். பின்னர், ரயில்வே பிளாட்பாரத்தில் ஒரு தேநீர் கடையில் வேலை செய்தார். தொடர்ந்து, அம்பாலாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை தேடினார்.
இவர் வேலை செய்து கொண்டே அவரது கல்வியையும் தொடர்ந்தார். திறந்தவெளிப் பள்ளி மூலம் பட்டப்படிப்பை முடித்த அவதார் கிருஷ்ணா கவுலுக்கு வெளியுறவு அமைச்சகத்தில் வேலை கிடைத்தது. இந்த சாதாரண அரசு வேலை அவருக்கு அமெரிக்காவில் பணியமர்த்தப்படும் வாய்ப்பை வழங்கியது.
அவர் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தில் சேர்ந்து திரைப்படத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து தன் தேவைகளுக்கு ஏற்றபடி பல்வேறு சிறிய வேலைகளை செய்தார். அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிரிட்டிஷ் தகவல் சேவைகள் போன்ற சர்வதேச ஊடக நிறுவனங்களிலும் வேலை செய்தார்.
இயக்குநர் அவதார் கிருஷ்ணா கவுல், அமெரிக்காவில் ஆன்னை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி கடந்த 1970 -இல் இந்தியா திரும்பியது. இதையடுத்து மிக குறுகிய காலத்தில் அவதார் கிருஷ்ணா கவுல் புகழ்பெற்ற மெர்ச்சன்ட் ஐவரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தால் பாம்பே டாக்கி திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியமர்த்தப்பட்டார்.
இந்த அனுபவம் அவருக்கு திரைப்பட தயாரிப்பை கற்றுக் கொடுத்தது மற்றும் அவர் இயக்குநராக அறிமுகமாகுவதற்கு அவரை தயார்படுத்தியது. இதையடுத்து, கடந்த 1974-ஆம் ஆண்டு அவர் எழுதி, இயக்கி, தயாரித்த ’ 27 டவுன்’ திரைப்படம் வெளியானது.
கடமைக்கும் ஆசைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.