கேப்டன் நடித்த ஒரே சீனை திரும்ப திரும்ப பார்த்த எம்.ஜி.ஆர்; எதற்காக தெரியுமா? மனம் திறந்த பிரபல இயக்குனர்

நடிகர் விஜயகாந்த் நடித்த காட்சி ஒன்றை எம்.ஜி.ஆர் திரும்ப திரும்ப பார்த்தது குறித்து பிரபல இயக்குநர் மனம் திறந்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் நடித்த காட்சி ஒன்றை எம்.ஜி.ஆர் திரும்ப திரும்ப பார்த்தது குறித்து பிரபல இயக்குநர் மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
mgr

கேப்டன் நடித்த ஒரே சீனை திரும்ப திரும்ப பார்த்த எம்.ஜி.ஆர்; எதற்காக தெரியுமா? மனம் திறந்த பிரபல இயக்குனர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்களில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் ‘கேப்டன்’ விஜயகாந்த் என்று அழைத்து வந்தனர். நடிகர் விஜயகாந்த் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். 

Advertisment

உதவி செய்யும் மனம் படைத்த நடிகர் விஜயகாந்த் தன்னால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களுக்கு பண உதவி, ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகள் போன்றவற்றை  செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பு தளத்தில் நான் சாப்பிடும் சாப்பாட்டை தான் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் பாரபட்சமின்றி ஒரே வகையில் உணவு கொடுத்தவர். 

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் நடித்த காட்சியை எம்.ஜி.ஆர் திரும்ப திரும்ப பார்த்தது குறித்து இயக்குநர் அரவிந்த் ராஜ் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “கருப்பு நிலா படத்தில் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடுவது போன்று ஒரு காட்சி வரும். 

அப்போது நான் சொன்னேன் விஜயகாந்திடம் இந்த காட்சியை  நாம் எல்லோருக்கும் உதவி செய்வது போன்று எடுத்துவிடுவோம் என்றேன். அதற்கு கேப்டன் உதவி செய்வது போன்று வேண்டாம். உண்மையில் உதவி செய்வோம் என்றார். 

Advertisment
Advertisements

அதன்பிறகு, சைக்கிள், கண்ணாடி போன்றவற்றை வாங்கிக் கொண்டு எம்.ஜி.ஆர் அறக்கட்டளையில் இந்த பாடலை எடுத்தோம். விஜயகாந்த் வந்திருக்கிறார் என்பதற்காக அறிந்த ஜானகி அம்மா மரியாதை நிமித்தமாக அவரை  பார்ப்பதற்காக வந்தார். 

அதன்பிறகு, கேப்டன் எங்களையெல்லாம் அறிமுகப்படுத்தினார். அப்பறம் ஜானகி அம்மா, தம்பி நீங்க ஒரு படத்தில் வண்டி ஓட்டிட்டு பாட்டு பாடிக்கொண்டே வருவீர்கள். உங்கள் பின்னாடி வண்டியெல்லாம் வரும் அந்த கேசட்டை தான் எம்.ஜி.ஆர் திரும்ப திரும்ப போட்டு பார்ப்பார். 

அதை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் சொல்லுவார் இந்த தம்பி என்னை மாதிரி உடம்பை வைத்திருக்கிறார். என்னை மாதிரியை சண்டை போடுகிறார் என்பார். ஐயா இருக்கும் போது நீ வரமாவிட்டுட்ட தம்பி இல்லையென்றால் உன்னை தான் வாரிசு என்று ஐயா சொல்லியிருப்பார்” என்று ஜானகி அம்மா கூறியதாக தெரிவித்தார்.

Vijayakanth Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: