/tamil-ie/media/media_files/uploads/2020/12/arun-alexander.jpg)
கடந்த பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராகப் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த அருண் அலெக்ஸாண்டர் காலமானார்.
கோலமாவு கோகிலா, பிகில், மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். குறிப்பாக, கத்தி திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அதிகளவு பேசப்பட்டது.
நேற்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. இவரின் மறைவு தமிழ் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் மறைவுக்குத் திரையுலகினரும், டப்பிங் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Dint expect you’ll leave us this soon na... couldn’t control my tears...you will be irreplaceable and you’ll always live in my heart na... pic.twitter.com/TcvJNTecAr
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 28, 2020
லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில்," எங்களை விட்டு இவ்வளவு சீக்கிரம் போவீர்கள் என்று நினைக்கவில்லை. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் இதயத்தில் என்றுமே நீங்கள் வாழ்வீர்கள்"என்று பதிவு செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.