பிரபல மலையாள சீரியல் நடிகை தீ வைத்து தற்கொலை

கேரளாவில் பிரபல சீரியல் நடிகை கவிதா தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

serial actress kavitha dead

கேரளாவில் பிரபல சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகை கவிதா எரிந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவருடைய கணவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்தது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

கவிதா தனது 4-வயது மகளுடன் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூரில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து, பள்ளியில் கோடை விடுமுறை என்பதால் கவிதா தன்னுடைய மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைத்து வந்த காவல் துறையினர் இவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Famous malayalam serial actress passed away by setting flame

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com