திடீர் மூச்சு திணறல்: பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி

80-களில் பிரபல இசையமைப்பாளராக இருந்த சங்கர் கணேஷ் மூச்சுத் திணறலால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

80-களில் பிரபல இசையமைப்பாளராக இருந்த சங்கர் கணேஷ் மூச்சுத் திணறலால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
sankar ganesh

பழம்பெரும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மூச்சுத் திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisment

1980கள் மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான சங்கர்-கணேஷ், பல்வேறு திரைப்படங்களுக்கு மறக்க முடியாத பாடல்களை உருவாக்கியவர்கள். சமீபகாலமாக, இசையமைப்பாளர் கணேஷ் தனித்து இசை நிகழ்ச்சிகளிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்களிலும் பங்கேற்று வருகிறார். இவரது திடீர் உடல்நலக் குறைவு திரைத்துறை வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களாக மிகவும் ஆக்டிவாக தனது மகன் ஸ்ரீயின் யூடியூப் பக்கங்களில் எல்லாம் நேர்க்காணலில் பங்கேற்று தனது திரைப்பட அனுபவங்கள், காதல் வாழ்க்கை, திருமணம் என பல சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு பாட்டு கச்சேரியில் பங்கேற்க செல்லும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இசையமைப்பாளர் சங்கர், பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உதவியாளராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், மற்றொரு இசையமைப்பாளரான கணேஷ் உடன் இணைந்து "சங்கர்-கணேஷ்" என்ற பெயரில் பணியாற்றத் தொடங்கினார். இருவரும் சேர்ந்து 1970கள் முதல் 90கள் வரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

அவர்களின் இசையமைப்பில் உருவான 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்', 'மௌனம் சம்மதம்', 'பட்டிக்காட்டு ராஜா' போன்ற திரைப்படப் பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. 'சங்கர்-கணேஷ்' இரட்டையர்கள் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இசைக்கருவி கோர்ப்பு மற்றும் மெல்லிசைப் பாடல்கள் பெரும் பாராட்டைப் பெற்றன. சங்கர் கணேஷ் அவர்களின் உடல்நலம் தேறி, விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: