தயாரிப்பாளரை தூக்கி விட்ட ரஜினி... வீட்டை விற்க வைத்த கமல்; அவரே சொன்ன தகவல்!

ரஜினி, கமல் படங்களினால் தான் அடைந்த நஷ்டம் குறித்து பிரபல தயாரிப்பாளர் மனம் திறந்துள்ளார்.

ரஜினி, கமல் படங்களினால் தான் அடைந்த நஷ்டம் குறித்து பிரபல தயாரிப்பாளர் மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
rajkamal

தயாரிப்பாளரை தூக்கி விட்ட ரஜினி... வீட்டை விற்க வைத்த கமல்; அவரே சொன்ன தகவல்!

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் பி.எல்.தேனப்பன். இவர் படங்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் நடித்தும் வருகிறார். கலகலப்பான பொழுதுபோக்கு படங்கள் முதல் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள் வரை தயாரித்துள்ளார்.

Advertisment

கடந்த 1998-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘காதலா காதலா’ திரைப்படத்தின் மூலம் தேனப்பன் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் இதுவரை 14-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். 

இவரது தயாரிப்பில் 'பம்மல் கே. சம்மந்தம்',  'பஞ்சதந்திரம்', 'கனா கண்டேன்', 'வல்லவன்' , 'பேரன்பு'  போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

தயாரிப்பாளர் தேனப்பன் 'போர் தொழில்', 'ஆதார்', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், சினிமாவில் நடிகர்கள், இசையமைப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், தயாரிப்பாளர் தேனப்பன் ‘படையப்பா’ மற்றும் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படங்களால் தான் அடைந்த நஷ்டம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, "படையப்பா படம் முடிந்ததும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் எல்லாம் கொடுத்து முடித்துவிட்டோம். 

அதன் பிறகு படத்தை இவ்வளவு பட்ஜெட்டில் முடிக்கிறோம் என்று கூறினீர்கள். ஆனால், அதை விட குறைவாகவே படத்தை முடித்துவிட்டீர்கள். ’படையப்பா’ படமும் மிகப்பெரிய ஹிட் என்பதால் மீதித் தொகையில் எவ்வளவு பாக்கி இருக்கிறதோ அதை படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் பிரித்து கொடுத்துவிட்டுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் சொன்னார். 

அதன்பிறகு அனைவரது வீட்டிற்கும் சென்று மீதி பணத்தை கொடுத்தோம். ஏறக்குறைய 125 சதவிகிதம் அனைவருக்கும் அதிகமாக கொடுத்தோம். ‘பஞ்சதந்திரம்’ படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்துவிட்டேன்.

படம் தோல்வியடைந்ததால் தினமும் காலையில் 5 மணி 6 மணிக்கு எல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் பணத்திற்காக வீட்டிற்கு வந்து அநாகரீகமாக பேசுவார்கள். இதனால் சென்னையில் இருந்த எனது 13 வீட்டில் 6 வீட்டுகளை விற்று அவர்களுக்கு பணத்தை கொடுத்தேன்” என்றார்.

Kamalhaasan Rajini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: