ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் பிரபல 80-ஸ் நடிகை ஒருவர் புதிதாக இணைந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான செம்பருத்தி சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.அதிலும் அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த கார்த்திக் மற்றும் பார்வதி இருவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த தொடரில் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து விலகியதால் தற்போது அக்னி என்பவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் புகழ் பெற்ற நடிகர் லிவிங்ஸ்டன் இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார்.
இதையடுத்து தற்போது இந்த சீரியலில் லேட்டஸ்டாக சின்னத்திரையின் சீனியர் நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

பிரபல நடிகை நளினி தற்போது புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளார்.டாக்டர் கதாபாத்திரத்தில் வந்துள்ள நளினியை ஷபானா சந்தித்து பேசும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.