பிரபு தேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை!!!

நடிகர் பிரபு தேவாவை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகப் பிரபல நடிகை நிகேஷா படேல் கூறியிருப்பது பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

தலைவன், என்னமோ எதோ, கரையோரம் மற்றும் நாரதன் படங்களில் நடித்தவர் நடிகை நிகேஷா படேல். இவருக்குப் பிரபு தேவா நடிப்பு என்றாலே கொள்ளை பிரியமாம். மேலும் இவர் குடும்பம் மற்றும் பிரபு தேவா குடும்பத்துக்கும் இடையே நல்ல உறவு நீடிப்பதாகவும் இவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், பிரபு தேவாவுடன் நடிப்பது மட்டும் ஆசை கிடையாது, அவரையே திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். இவ்வாறு நிகேஷா கூறியிருப்பது திரையுலகம் மற்றும் பிரபு தேவா ரசிகர்கள் இடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரபு தேவாவின் பிறந்த நாளுக்கு சில நாட்கள் முன்பு தனது ட்விட்டரில் வாழ்த்துக் கூறிய நிகேஷா படேல், “உலகின் சிறந்த மனிதனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்க வார்த்தைகள் இல்லை பிரபு தேவா.” என்று கூறியுள்ளார்.

நடிகை நிகேஷா பகிர்ந்துள்ள இந்த ட்வீட் மற்றும் பேட்டியில் கூறியிருப்பதைப் பலர் விமர்சித்து வருகின்றனர்.

×Close
×Close