Advertisment

35 வயது சினிமா விமர்சகர் கௌஷிக் மரணம்: தூக்கத்தில் மாரடைப்பு

கலாட்டா, பிஹைண்ட்வுட்ஸ் உள்ளிட்ட பல சினிமா யூடியூப் சேனல்களில் கௌஷிக் பணியாற்றியுள்ளார்

author-image
WebDesk
New Update
Kaushik lM

Kaushik LM dies in Chennai

பிரபல சினிமா விமர்சகரும், கலாட்டா யூடியூப் சேனலின், வீடியோ ஜாக்கியும் ஆன,  கௌஷிக் எல்எம் ஆகஸ்ட் 15 அன்று காலமானார். அவருக்கு வயது 35. கௌசிக் மாரடைப்பு காரணமாக தூக்கத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

கௌஷிக் தனது திரைப்பட விமர்சனங்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களுடன் நேர்காணல்கள் மூலம் பிரபலமானவர்.

ரோகினி மற்றும் கருணாகரன் நடிப்பில் வெளிவரவிருக்கும், ஜிவி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கௌஷிக் எல்எம் கலந்து கொள்ளவிருந்தார். ஆனால், அவர் நிகழ்ச்சிக்கு வராததால், அவரது நண்பர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் இல்லை.

அவர் மதியம் 2 மணியளவில் தூங்கச் சென்றார், அதன்பிறகு எழுந்திருக்கவில்லை," என்று அவருடன் இருந்த நண்பர் கூறினார். அடிப்படையில் கௌசிக் ஒரு பொறியியல் பட்டதாரி. பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் திரைப்பட விமர்சராக தனது மீடியா வாழ்க்கையைத் தொடங்கினார்.

பின்னர், அவர் கலாட்டாவில் சேருவதற்கு முன்பு, சமூக ஊடகங்களில் பிரபலமானார்.

அவரது இறப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கலட்டா யூடியூட் சேனல் தனது ட்வீட்டர் பக்கத்தில்’ புகழ்பெற்ற திரைப்பட விமர்சகர், திரைப்பட டிராக்கர் மற்றும் கலாட்டா VJ கெளசிக் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு எங்களுக்கு தனிப்பட்ட இழப்பாகும், இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கலாட்டா’ ஆழ்ந்த இரங்கலையும் வலுவான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தொகுப்பாளர் டிடி, கீர்த்தி சுரேஷ்  ஆகியோரும் கெளசிக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment