Advertisment

ரூ 6 கோடி கார் வைத்துக் கொண்டு சைக்கிளில் சுற்றும் பிரபல நடிகர்: அதுக்கு ஒரு காரணம் சொன்னார் பாருங்க!

கார்த்திக் ஆர்யன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Karthik Aryan
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாலிவுட் சினிமாவில் முன்னணி இளம் நடிகரான கார்த்திக் ஆர்யன், இன்று தனது ரசிகர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கிய நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கததில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment

பாலிவுட் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருக்கும் கார்த்திக் ஆர்யன், தற்போது போல் பாலையா 3, சண்டு சாம்பியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். 6 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காரை வாங்கிய பிறகு ஏன் சைக்கிள் ஓட்டுகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள கார்த்திக் ஆர்யன், இப்போது நான் சைக்கிள் மூலம் செட் செய்ய நினைக்கிறேன் என்று கூறியள்ளார்.

மற்றொரு ரசிகர் நடிகரின் ரீலில், "ரூ. 6 கோடி மதிப்புள்ள உங்கள் காரை எனக்குக் கொடுங்கள்" என்று கருத்துத் தெரிவித்தார், அதற்கு கார்த்திக், "இன்னொரு நண்பன் கடனாகப் பெற்றிருக்கிறான்.. அவன் வந்தவுடன் சொல்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், "பாருங்கள், அவர் 5 கோடி கார் வாங்கிவிட்டு சைக்கிளில் அலைகிறார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு பதிலளித்த கார்த்திக், "பழைய பழக்கங்களை உடைக்க நேரம் எடுக்கும்" என்று எழுதினார். மற்றொரு ரசிகர் கார்த்திக்கை "ஜிம் பாய்" என்று அழைத்தபோது, நடிகர் "எப்போதும் அப்படித்தான்" என்று பதில் அளித்துள்ளார். கார்த்திக் சமீபத்தில் புதிய ஸ்வான்கி காரை வாங்கி, காரின் பானெட்டில் அவரும் அவரது நாய்யும் போஸ் கொடுக்கும் படத்தை வெளியிட்டிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment